.........................மொக்கையும் மொக்கை சார்ந்த இடமும்.........................
அதையும் தாண்டி புனிதமானது!
மாலை எழுமணிக்கெல்லாம் பண்ணையில் அமைந்துள்ள யாழ்-கொழும்பு பேருந்து நிலையம் வழமை போல் தனக்கேயுரிய பரபரப்புடன் இயங்க்கிக்கொண்டிருந்தது. முன் கூட்டியே பதிவு செய்யப்பட்ட பேருந்தினருகில் தன்னக்காகவே காத்திருக்கும் மிதுலனை அழைத்துக்கொண்டு பஸ்ஸினுள் ஏறினான் ரஜீவன்.
ஏறியவுடனேயே 23 ,24ஆம் சீட்டுக்களில் யார் உட்காந்திருக்கிறார்கள் என்பதை கவனித்தான். அவர்களுடைய சீட் நம்பர் என்னவோ 21 ,22 தான். ஆனால் இளைஞர்கள், இளைஞசிகள் தமது நீண்ட பேருந்துப் பயனங்களின் போது தமது இருக்கைகளின் வசதி பற்றிக் கவலைப்படுகிறார்களோ இல்லையோ.. தமக்கருகில் இருக்கும் ஆசனங்களில் அமரப் போகிறவர்களைப் பற்றி அதிக அக்கறை காட்டுவார்கள். அந்தத் தொலைநோக்குப் பார்வையில்தான் ரஜீவன் தனக்கருகில் இருந்த இருக்கைகளை நோட்டமிட்டான். அந்த இருக்கைகளை அதுவரை காற்றுத்தான் நிரப்பிக்கொண்டிருந்தது.
ரஜீவனும் மிதுலனும் ஏறும்போதே முக்கால்வாசி சீட்டுக்கள் நிரம்பியிருந்தன. இவர்களிருவரும் தத்தம் இருக்கைகளில் செட்டிலாகி அரை மணிநேரம் கடந்தும் அவர்களுக்கருகிலிருந்த இரு ஆசனகளையும் கடைசியில் மூன்று சீட்டுகளையும் தவிர அனைத்திலும் மனிதத்தலைகள். பஸ்சும் புறப்படத் தாயரானபோதுதான் எங்கிருந்தோ வந்த அந்த இரு பெண்களும் அரக்கப்பறக்க பேருந்தினுள் ஏறினர்.
" அவளா அது?!
ஆமாம்! அவள்தான் அது! "
மூன்று செக்கனுக்குள் தானே கேள்வியும் கேட்டு அவனே விடையும் சொல்லிக்கொண்டான் ரஜீவன். அவனது மூளை இவ்வளவு வேகமாக முன்னரேயே சிந்தித்திருந்தால் முதல் தடவையிலேயே பல்கலைக்கழகத்துக்குள் நுழைத்திருப்பான். ஏறியவர்கள் தனக்குப் பக்கத்தில் இருக்கும் வெற்றிடத்தைத்தான் நிரப்பப்போகிறார்களா?
அல்லது....
ச்சே! ச்சே!...கடைசி சீட்டுக்களில் மனுஷன் உட்காருவானா?!
யாழில் கர்ப்பத்துடன் ஏறுவள் கொழும்பில் இறங்கும்போது குழந்தையுடன்தான் இறங்குவாள். அப்படி ஒரு குலுக்கல்.
அவனது நம்பிக்கையொன்றும் பொய்க்கவில்லை. வந்த தேவதைகள் (அந்த மூஞ்சிகளுக்கு தேவதைகள் என்பது கொஞ்சம் ஓவர்தான்) சொல்லிவைத்தாற் போல் ரஜீவனுக்கு பக்கத்திலிருந்த
ஆசனங்களில் அமர்ந்துகொண்டனர். அமர்வதற்க்கு முன்னாள் வந்தவர்களில் ஒருத்தி ரஜீவனைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையை வீசிவிட்டே அமர்ந்தாள். அந்த இருவரில் யார் தன் அருகில் அமர வேண்டுமென எதிர்பார்த்தானோ அவளே அமர்ந்தாள். என்றுமே இல்லாதவாறு ரஜீவனுக்கு அதிஷ்டக்காற்று கொஞ்சம் பலமாகவே வீசியது.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததது!
எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!
என்று நம்பினான் ரஜீவன்.
அது என்ன நடக்கப் போவது?
ரஜீவன் படித்த இந்துக் கல்லூரியின் சகோதரப் பாடசாலையான இந்து மகளிர் கல்லூரியில்தான், இப்போது பேருந்தில் ரஜீவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாளே அந்த 'அனுஷா' படித்தாள். சகோதரப் பாடசாலையில் படித்தாள் அனைவரையும் சகோதர சகோதரிகளாக நினைக்கவேண்டுமா என்ன?!
ஆதலால் சகோதரப் பாடசாலையில் படித்தாலும் அனுஷாவை சயின்ஸ் ஹாலில் கண்ட அந்தக் கணத்திலேயே 17வது முறையாகக காதலில் விழுந்தான் நம்ம கதை நாயகன் ரஜீவன். காதலில் விழுவதும் பின்பு எழும்புவதும் அவனுக்கொன்றும் புதிதல்ல. ஏற்கனவே பதினாறு முறை முயற்சி செய்து தோல்வியடைந்து ' வீழ்வது தவறல்ல! வீழ்ந்து கிடப்பதுதான் தவறு! ' என்று 'விடாமுயற்சி'க்கு யாரோ சொன்ன அற்புதமான வரிகளை இந்த மூதேவி தன் காதல் திருவிளையாடல்களுக்குப் பயன்படுத்திக்கொண்டது.
அதன் பின்பு பரீட்சைக்குத் தயாராவதிலேயே காலம் சென்றது. தன்னைப் போலவே அனுஷாவும் பல்கலைக்கழக நுழைவை விளிம்பில் தவறவிட்டதை கேள்விப்பட்டு மகிழ்ந்த ஒரே நல்லவனும் ரஜீவன்தான். ஏனெனில் தனக்கு முன்னரேயே அவள் பல்கலைகழகம் சென்றுவிட்டால் அந்த திராட்சைப் பழத்தை வேறு எந்த நரியாவது தட்டிப் பறித்துக் கொண்டுவிடுமே என்ற அச்சம்தான். சொல்லிவைத்தாற் போல் இரண்டாவது தடவையில் இருவரும் ஒரே பல்கலைகழகத்துக்கு தேர்வாகியிருந்தனர். ஆனால் விதி வெட்டுப்புள்ளி வடிவில் மீண்டும் விளையாடியது. அவள் தேர்வு செய்த துறைக்குள் இவனால் நுழையமுடியவில்லை.
வேறு துறையென்றாலும் அனுஷாவின் ஒவ்வொரு அசைவையும் யாரோ ஒ௦ருவர் மூலம் அறிந்து கவனித்தபடி இருந்தான். அவள் வெள்ளவத்தையில் தோழிகளோடு தங்கியிருந்த வீடு, அவள் எந்தக் கடையில் வழமையாகச் சாப்பிடுகிறாள் என்று அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தான். தற்செயலாக எங்காவது காணும்போது அவள் மெல்லிய புன்னகையோடு இவனைக் கடந்து செல்வாள். அதற்க்கான அர்த்தம் 'நீயும் நானும் யாழில் அருகருகில் இருந்த கல்லூரிகளில் படித்தவர்கள். சயின்ஸ் ஹாலுக்கு வரும்போது உன்னை அடிக்கடி கண்டிருக்கிறேன் ' அவ்வளவுதான். அது அவனுக்கும் தெரியும் . ஆனாலும் அதற்க்கு வேறு வேறு வேறு அர்த்தங்கள் கண்டுபிடித்து புளுக்கப்பட்டுக் கொண்டான்.
இத்தனை நாட்களில்,பல மணி நேரத்தையும் பல மைல் தூரத்தையும் பக்கத்திலிருந்தபடியே கடக்கும் இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கவில்லை இன்று எப்படியாவது நான்கு வருடங்களாக சேமித்து வைத்திருந்த காதலை சொல்லிவிடுவதென்று முடிவெடுத்துவிட்டான். முடிவெடுத்த அந்தக் நிமிசத்திலிருந்து நிமிடத்திற்க்கு 72 தடவை மட்டும் துடிக்கவேண்டிய இதயம், 96 தடவை துடிக்கத் தொடங்கியது. பஸ் இன்ஜினை விட தன் உடலிலிருந்து அதிக உஷ்ணம் வெளியேறுவதாய் உணர்ந்தான்.
அரை மீற்றர் இடைவெளியில் காதலி!
இன்னமும் முடிவு தெரியாக் காதல்!
காதலை எப்படியாவது சொல்லிவிடுவதேன்ற தீர்க்கமான முடிவு!இப்படியான சூழ்நிலையில் யாருக்காயினும் இதயத் துடிப்பு வேகமாவது இயல்புதானே.
இப்போது பிரச்சினை காதலை எப்படிச் சொல்வது?
ஒரு வெள்ளைக் காகிதத்தில் தனது வெள்ளை மனதின் ஓரத்தில் படிந்துள்ள காதல் பற்றிய கலர் கலர் கனவுகளை எழுதி அவளது கைகளுக்குள் திணிப்பததா?
அல்லது
ஏற்கனவே யாரோ ஒருவரின் உதவியுடன் பெற்று இன்னமும் பயன்படுத்தாமல் வைத்திருந்த அனுஷாவின் கையடக்கத் தொலைபேசி எண்ணுக்கு காதல் குறுஞ்செய்தி அனுப்புவதா?
அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது.
தன்னோடு இன்னொரு ஜீவனும் வந்ததே! அதனிடம் ஏதாவது ஐடியா கேட்கலாமே என்று மிதுலன் பக்கம் பார்வையைத் திருப்பினான்.
ஊர்ந்து கொண்டிருந்த பேருந்தில் ஓடிக்கொண்டிருந்த அந்த மொக்கைப் படத்தை ஆறாவது முறையாகவும் ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்து அது. ரஜீவனுக்கு இருந்த காதல் பட படப்பில் அது என்ன திரைப்படம் என்று நிமிர்ந்து பார்க்கும் துளி ஆர்வம் கூட இல்லை. ஆனால் திரைப்படத்தில் யாரோ ஒருவர் முக்கி முக்கி பேசும் வசனம் மட்டும் செவிகளில் விழுந்த வண்ணமிருந்தது.
"என் வாழ்க்கைல ஒவ்வொரு நிமிசமும் ஒவ்வொரு செக்கனும் நானா செதுக்கினதுடா "
ரஜீவன் எதிலும் ஆர்வமற்றவனாக காதலில் சொதப்புவது எப்படி? என்று தீவிரமாக ஜோசித்துக்கொண்டிருந்தான்.
யோசனைகளுக்கிடையில் திருமுறிகண்டியும் வந்து சேர்ந்தது. பெரும்பாலானோர் இறங்க அந்த பெரும்பாலானோரில் அனுஷாவும் இருக்கக் கண்டு ரஜீவனும் இறங்கினான்.
(மிதுலனும் அனுஷாவின் பெயர் தெரியாத் தோழியும் இறங்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம்.அவர்கள் இறங்குவது இக்கதையின் போக்குக்கு நல்லதல்ல. ஆகவே அவர்கள் இறங்கவில்லை)
அனுஷா கால்களையும் முகத்தையும் கழுவிக் கொண்டிருக்கும்போது ரஜீவன் தன் சொல்லாத காதலைச் சொல்ல நெருங்கினான். கழுவி முடித்த அவள் இவ்வளவு காலமும் தந்திராத ஒரு அழகிய புன்னகையோடு கையிலிருந்த கிண்ணத்தை நீட்டினாள்.
'ஆமா! உன்னிடம் இதை வாங்கத்தான் இப்போது வந்தேன்'
என்று மனதுக்குள் நொந்துகொண்டே கால்களைக் கழுவினான். அவள் முகத்தில் துடைக்கப்பபடாதிருந்த நீர்த்துளிகளைப் பார்க்கும்போது பூக்கள் மேல் விழுந்த காலைப் பனித்துளிகள்தான் நினைவுக்கு வந்தது. அந்த நள்ளிரவு ஒருமணிக்கு, நடு ரோட்டில் நிற்க்கும்போது கூட அவனுக்கு கவிதை வருமாப் போல் இருந்தது.
அனுஷா பய பக்தியோடு பிள்ளையாரை தரிசித்துக்கொண்டிருந்தபோது என்றுமே இல்லாதவாறு ரஜீவனும் கண்களை மூடி வாய்க்குள் எதோ முனு முணுத்தான்.
அட! எதோ வேண்டிகொள்கிறான் போலும்....
என்ன வேண்டுதல்?
' உன் தம்பியினுடைய லவ்க்கு ஹெல்ப் பண்ணியது போல் என் காதலையும் எப்படியாவது சேர்த்துவை பிள்ளையாரப்பா!
அப்படி என் வேண்டுதலை நீ நிறைவேற்றினால் எனக்கும் அவளுக்கும் பிறக்கும் குழந்தைக்கு உன் சந்நிதானத்திலேயே வைத்து மொட்டையடிக்கிறேன் ' என்று கூட வேண்டியிருக்கலாம்.
கண்ணைத் திறந்தால் பிள்ளையார் இருந்தார்.
அனுஷாவைக் காணோம்!
எல்லாப் பக்கமும் பார்வையைப் படரவிட்டான். அதிலிருந்த ஒரு கடைக்குள் அவள் நுழைவது தெரிந்தது.இவனும் அதே கடைக்கு போனான்.
அவள் வாங்கிய அதே நெஸ்கபேயை வாங்கினான். அவளைப் பார்த்ததும் வழமையாகச் செய்கிற பரஸ்ப்பர புன்சிரிப்புப் பரிமாற்றத்துடன் கடைக்கு வெளியே வந்த, நின்ற நிலையில் வாங்கிய நெஸ்கபேயை சுவைத்தபடி மீண்டும் எப்படி தன் காதலை வெளிப்படுத்துவது என்ற சிந்தனையில் ஆழ்ந்து.....ரஜீவன்!
திடுக்கிடுத்திரும்பினான்.
அங்கே அனுஷா நின்றுகொண்டிருந்தாள்.
முதன் முதலாக அவனது பெயர் அவனுக்கே அழகாய்த் தெரிந்தது.
மீண்டும் அவளே தொடர்ந்தாள்.
' studies எப்பிடி போகுது?'
ஏதோ கேட்டாள்.
இவனும் சிரித்து குலைந்து அவளை விட அதிகமாய் வெட்க்கப்பட்டு சம்மந்தமேயில்லாமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
அவள் கையிலிருந்த 'நெஸ்கபே' ஐந்து நிமிடம் பேசுவதற்க்கே போதுமாயிருந்தது.
அவள் தனக்கேயுரிய புன்சிரிப்புடன் விடைபெற்று பஸ்ஸை நோக்கிப் போய்க்கொண்டிருந்தாள்.அப்போது ரஜீவனுக்குள் யாரோ பேசத் தொடங்கினார்கள்.
' இதைவிட உனக்கு வேறு நல்ல சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்கப் போவதில்லை.இதற்க்கு முன்னர் ஒரு வார்த்தைகூட பேசியிராத ஒருத்தி உரிமையாக உன் பெயர் சொல்லி வலிய வந்து பேசுகிறாள் என்றால் என்ன அர்த்தம்? நீ காதலைச் சொல்லி அவள் மறுத்தால் உலகம் என்ன அழிந்துவிடப் போகிறதா?
எதற்காக நீ கலங்குகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்க்கு
இன்றைய உன்னுடையது நாளை வேறோருவனாகிறது! '
என்று மீண்டும் கிருஷ்ணன் சொன்ன பகவத் கீதையைச் சொல்லி யாரோ ஒருவன் உள்ளுக்குள் இருந்து உசுப்பிவிட்டுக்கொண்டிருந்தான்.
அவள் பஸ்சில் ஏறுவற்க்குள் தன் காதலைக் கொட்டிவிடத் துணிந்தான்.
நடந்தான்.
வேகமாக நடந்தான்.
மிக வேகமாக நடந்தான்.
அனுஷா!
அவளுக்கு கேட்கவில்லை.
அனுஷா!
திரும்பிப் பார்த்தாள்.
அவள் திரும்பியதுதான் தாமதம்
' ஒரு நிமிஷம்! சொல்றேன்னு தப்ப நினைக்கதையும் எப்ப முதன் முதல்ல உம்மள ...' அவனிடமிருந்து வார்த்தைகள் ஒரு ஒழுக்கின்றி தாறுமாறாக வந்து விழுந்து கொண்டிருந்தது. எப்படியோ சொல்லவந்ததை ஒருவாறாக சொல்லி முடித்திருந்தான். அவளின் முகம் இறுக்கிப் போயிருந்தது. பதிலேதும் இல்லை. இறங்கிய எல்லோரும் பஸ்சில் ஏறிக்கொண்டிருந்தனர் அனுஷாவும் பஸ்சில் ஏறுவது தெரிந்தது.
சில வினாடிகளுக்கு முன் 'கட்டாயம் சொல்லியே தீரவேண்டும்' என்று கட்டளை போட்ட மனசு இப்போது 'ஏன் அவசரப்பட்டு சொன்னாய்?' என்று கேள்வியும் கேட்டது. இதயத்துடிப்பு வேகம் குறைந்து வழமை போல் துடிக்கத் தொடங்கியது. உடலிலும் உள்ளத்திலும் ஒருவித சோர்வு படரத் தொடங்கியது. உசுப்பி விட்ட அந்தக் குரலும் இப்போது கேட்கவில்லை. கடைசியாளாக பஸ்சில் ஏறினான். படிகளில் ஏறும்போதே தனது 'காதல் தோல்விச் சாதனைப் பட்டியலில்' 17வாதாக அனுஷாவையும் சேர்த்துக்கொண்டே ஏறினான்.
அவளை இனித் தற்செயலாகக் கூடப் பார்த்துவிடக்கூடாது என்று முடிவெடுத்த ரஜீவன். அவள் சீட்டுப்பக்கம் பார்வையைத் திருப்பாமல் தன் இருக்கையில் அமர்ந்துகொண்டான்.
இனி எப்படி அவள் முகத்தில் முழிப்பேன்?சொல்லாவிட்டாற் கூட என்றாவது சொல்லி ஓகே பண்ணிடலாம் என்ற நம்பிக்கையில் காலம் கழித்திருக்கலாமே!
அல்லதுஅன்புக்குரிய தோழிகள் பட்டியலில் அவளையும் சேர்த்திருக்கலாமே!
இப்போது சொல்லி என்ன பயன் காதல் தோல்விப் பட்டியலில் கூட ஒரு பெயர் சேர்ந்து, பட்டியலின் நீளம் கூடியதுதான் மிச்சம். ரஜீவனின் மனசு A9 பாதியில் இருந்த அத்தனை குண்டு குழிகளிலும் விழுந்து விழுந்து எழும்பியது.
"என் வாழ்க்கைல ஒவ்வொரு நிமிசமும் ஒவ்வொரு செக்கனும் நானா செதுக்கினதுடா "
ரஜீவன் எதிலும் ஆர்வமற்றவனாக காதலில் சொதப்புவது எப்படி? என்று தீவிரமாக ஜோசித்துக்கொண்டிருந்தான்.
யோசனைகளுக்கிடையில் திருமுறிகண்டியும் வந்து சேர்ந்தது. பெரும்பாலானோர் இறங்க அந்த பெரும்பாலானோரில் அனுஷாவும் இருக்கக் கண்டு ரஜீவனும் இறங்கினான்.
(மிதுலனும் அனுஷாவின் பெயர் தெரியாத் தோழியும் இறங்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம்.அவர்கள் இறங்குவது இக்கதையின் போக்குக்கு நல்லதல்ல. ஆகவே அவர்கள் இறங்கவில்லை)
அனுஷா கால்களையும் முகத்தையும் கழுவிக் கொண்டிருக்கும்போது ரஜீவன் தன் சொல்லாத காதலைச் சொல்ல நெருங்கினான். கழுவி முடித்த அவள் இவ்வளவு காலமும் தந்திராத ஒரு அழகிய புன்னகையோடு கையிலிருந்த கிண்ணத்தை நீட்டினாள்.
'ஆமா! உன்னிடம் இதை வாங்கத்தான் இப்போது வந்தேன்'
என்று மனதுக்குள் நொந்துகொண்டே கால்களைக் கழுவினான். அவள் முகத்தில் துடைக்கப்பபடாதிருந்த நீர்த்துளிகளைப் பார்க்கும்போது பூக்கள் மேல் விழுந்த காலைப் பனித்துளிகள்தான் நினைவுக்கு வந்தது. அந்த நள்ளிரவு ஒருமணிக்கு, நடு ரோட்டில் நிற்க்கும்போது கூட அவனுக்கு கவிதை வருமாப் போல் இருந்தது.
அனுஷா பய பக்தியோடு பிள்ளையாரை தரிசித்துக்கொண்டிருந்தபோது என்றுமே இல்லாதவாறு ரஜீவனும் கண்களை மூடி வாய்க்குள் எதோ முனு முணுத்தான்.
அட! எதோ வேண்டிகொள்கிறான் போலும்....
என்ன வேண்டுதல்?
' உன் தம்பியினுடைய லவ்க்கு ஹெல்ப் பண்ணியது போல் என் காதலையும் எப்படியாவது சேர்த்துவை பிள்ளையாரப்பா!
அப்படி என் வேண்டுதலை நீ நிறைவேற்றினால் எனக்கும் அவளுக்கும் பிறக்கும் குழந்தைக்கு உன் சந்நிதானத்திலேயே வைத்து மொட்டையடிக்கிறேன் ' என்று கூட வேண்டியிருக்கலாம்.
கண்ணைத் திறந்தால் பிள்ளையார் இருந்தார்.
அனுஷாவைக் காணோம்!
எல்லாப் பக்கமும் பார்வையைப் படரவிட்டான். அதிலிருந்த ஒரு கடைக்குள் அவள் நுழைவது தெரிந்தது.இவனும் அதே கடைக்கு போனான்.
அவள் வாங்கிய அதே நெஸ்கபேயை வாங்கினான். அவளைப் பார்த்ததும் வழமையாகச் செய்கிற பரஸ்ப்பர புன்சிரிப்புப் பரிமாற்றத்துடன் கடைக்கு வெளியே வந்த, நின்ற நிலையில் வாங்கிய நெஸ்கபேயை சுவைத்தபடி மீண்டும் எப்படி தன் காதலை வெளிப்படுத்துவது என்ற சிந்தனையில் ஆழ்ந்து.....ரஜீவன்!
திடுக்கிடுத்திரும்பினான்.
அங்கே அனுஷா நின்றுகொண்டிருந்தாள்.
முதன் முதலாக அவனது பெயர் அவனுக்கே அழகாய்த் தெரிந்தது.
மீண்டும் அவளே தொடர்ந்தாள்.
' studies எப்பிடி போகுது?'
ஏதோ கேட்டாள்.
இவனும் சிரித்து குலைந்து அவளை விட அதிகமாய் வெட்க்கப்பட்டு சம்மந்தமேயில்லாமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
அவள் கையிலிருந்த 'நெஸ்கபே' ஐந்து நிமிடம் பேசுவதற்க்கே போதுமாயிருந்தது.
அவள் தனக்கேயுரிய புன்சிரிப்புடன் விடைபெற்று பஸ்ஸை நோக்கிப் போய்க்கொண்டிருந்தாள்.அப்போது ரஜீவனுக்குள் யாரோ பேசத் தொடங்கினார்கள்.
' இதைவிட உனக்கு வேறு நல்ல சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்கப் போவதில்லை.இதற்க்கு முன்னர் ஒரு வார்த்தைகூட பேசியிராத ஒருத்தி உரிமையாக உன் பெயர் சொல்லி வலிய வந்து பேசுகிறாள் என்றால் என்ன அர்த்தம்? நீ காதலைச் சொல்லி அவள் மறுத்தால் உலகம் என்ன அழிந்துவிடப் போகிறதா?
எதற்காக நீ கலங்குகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்க்கு
இன்றைய உன்னுடையது நாளை வேறோருவனாகிறது! '
என்று மீண்டும் கிருஷ்ணன் சொன்ன பகவத் கீதையைச் சொல்லி யாரோ ஒருவன் உள்ளுக்குள் இருந்து உசுப்பிவிட்டுக்கொண்டிருந்தான்.
அவள் பஸ்சில் ஏறுவற்க்குள் தன் காதலைக் கொட்டிவிடத் துணிந்தான்.
நடந்தான்.
வேகமாக நடந்தான்.
மிக வேகமாக நடந்தான்.
அனுஷா!
அவளுக்கு கேட்கவில்லை.
அனுஷா!
திரும்பிப் பார்த்தாள்.
அவள் திரும்பியதுதான் தாமதம்
' ஒரு நிமிஷம்! சொல்றேன்னு தப்ப நினைக்கதையும் எப்ப முதன் முதல்ல உம்மள ...' அவனிடமிருந்து வார்த்தைகள் ஒரு ஒழுக்கின்றி தாறுமாறாக வந்து விழுந்து கொண்டிருந்தது. எப்படியோ சொல்லவந்ததை ஒருவாறாக சொல்லி முடித்திருந்தான். அவளின் முகம் இறுக்கிப் போயிருந்தது. பதிலேதும் இல்லை. இறங்கிய எல்லோரும் பஸ்சில் ஏறிக்கொண்டிருந்தனர் அனுஷாவும் பஸ்சில் ஏறுவது தெரிந்தது.
சில வினாடிகளுக்கு முன் 'கட்டாயம் சொல்லியே தீரவேண்டும்' என்று கட்டளை போட்ட மனசு இப்போது 'ஏன் அவசரப்பட்டு சொன்னாய்?' என்று கேள்வியும் கேட்டது. இதயத்துடிப்பு வேகம் குறைந்து வழமை போல் துடிக்கத் தொடங்கியது. உடலிலும் உள்ளத்திலும் ஒருவித சோர்வு படரத் தொடங்கியது. உசுப்பி விட்ட அந்தக் குரலும் இப்போது கேட்கவில்லை. கடைசியாளாக பஸ்சில் ஏறினான். படிகளில் ஏறும்போதே தனது 'காதல் தோல்விச் சாதனைப் பட்டியலில்' 17வாதாக அனுஷாவையும் சேர்த்துக்கொண்டே ஏறினான்.
அவளை இனித் தற்செயலாகக் கூடப் பார்த்துவிடக்கூடாது என்று முடிவெடுத்த ரஜீவன். அவள் சீட்டுப்பக்கம் பார்வையைத் திருப்பாமல் தன் இருக்கையில் அமர்ந்துகொண்டான்.
இனி எப்படி அவள் முகத்தில் முழிப்பேன்?சொல்லாவிட்டாற் கூட என்றாவது சொல்லி ஓகே பண்ணிடலாம் என்ற நம்பிக்கையில் காலம் கழித்திருக்கலாமே!
அல்லதுஅன்புக்குரிய தோழிகள் பட்டியலில் அவளையும் சேர்த்திருக்கலாமே!
இப்போது சொல்லி என்ன பயன் காதல் தோல்விப் பட்டியலில் கூட ஒரு பெயர் சேர்ந்து, பட்டியலின் நீளம் கூடியதுதான் மிச்சம். ரஜீவனின் மனசு A9 பாதியில் இருந்த அத்தனை குண்டு குழிகளிலும் விழுந்து விழுந்து எழும்பியது.
அனுஷா நிச்சயமாக தன் தோழியிடமோ,வேறு யாரிடமோ சொல்லப் போவதில்லை. சற்று முன் முடிந்து போன அந்தக் காதல் கதை பற்றி தன்னையும் அவளையும் முறிகண்டிப் பிள்ளையாரையும் தவிர வேறு யாருக்கும் தெரிவற்க்கு வாய்ப்பில்லை.
ஆனாலும் 17வது காதலேன்றாலும் கூட அது தந்த வலி அதிகமாவே இருந்தது.பாதையில் கொஞ்சம் பெரிய குழி போல திடிரென்று பஸ் கொஞ்சம் அதிகமாகவே குலுங்கி எழும்ப தற்செயலாகக் கூட பார்க்ககூடாது என்று என்று நினைத்த அனுஷாவின் முகத்தை தற்செயலாய் பார்த்தான்.
நான்கு விழிகளும் இரு பார்வைகளும் ஒரு புள்ளியில் சந்தித்துக்கொண்டன.சுவற்றில் அடித்த பந்தாய் சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டான். ஆனால் ஏதோ அவள் சிரித்ததைப்போன்று உணர்ந்தான். காதல் மயக்கம் இன்னமும் தெளியவில்லை என்று நினைத்தவன் மனம் கேட்காமல் அவள் பக்கம் நைசாகத் தன் பார்வையைக் கசியவிட்டான். அவள் உதடுகள் வழமை போல் அவனைப் பார்த்து புன்னகைத்தன. அனால் அந்தப் புன்னகையில் வழமையை விடவும் வேறு ஏதோ கலந்திருந்தது. குறும்பு,செல்லக் கோபம், வெட்கம்,காதல் இன்னும் ஏதேதோ...
அவள் கண்கள் உதடுகளை விடவும் அதிகமாச் சிரித்தன.
தன்னை சுதாகரித்துக்கொண்டு நெற்றியைச் சுருக்கி புருவத்தை உயர்த்தி ' ம்ம்ம்...? ' என்று சத்தமே வராது சம்மதம் கேட்டான். அவளும் இன்னும் அகலமாய் சிரித்து காற்றுக்கு நோகாமல் மேலும் கீழுமாய்த் தலையசைத்து கண்களை மெதுவாக மூடித் திறந்து சம்மதம் சொன்னாள்.
அவ்வளவுதான்!
' ஓ! ' என்று கத்தவேண்டும் போல்
அல்லது
பஸ்ஸின் அந்த முனையிலிருந்து மற்ற முனைவரை ஓட வேண்டும் போல்
அல்லது
ஓடுகிற பஸ்சிலிருந்து குதிக்கவேண்டும் போல்
அல்லது
கண்டக்டரையும் டிரைவரையும் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கவேண்டும் போல்
ஏதாவது ஒன்றை செய்யவேண்டும் போல் இருந்தது ரஜீவனுக்கு.
வவுனியாவை தாண்டியவுடனேயே பஸ்சில் பாடல்கள் நிறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் ரஜீவனுக்கு மட்டும் 'பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே.. பார்த்ததாரும் இல்லையே..' என்று அந்தப் பாடலைப் பாடலைப் பாடிய, ஹரிணி, ரூப் குமார் ரதோட் , அன்றியா, G. V. பிரகாஷ் குமார் நால்வரும் அவனது காதலுக்காக உருகி உருகிப் பாடுவது அவன் காதில் மட்டும் கேட்டபடியேயிருந்தது. அவளது காதிலும் கேட்டிருக்கவேண்டும் போல், எமி ஜாக்சன் கொடுத்த அதே ரியாக்சன் அவள் முகத்திலும்.
இந்த சந்தோசத்தை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டான்.
ஏனெனில்
துக்கத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும்போது அது அரைவாசியாக குறைந்து விடுகிறது. சந்தோசத்தை பகிர்ந்துகொள்ளும்போது அது இரட்டிப்பாகிறது'அவனுக்கு அந்த சந்தோசம் அப்போது இரட்டிப்பாகத் தேவைப்பட்டது.அதற்கு ஒரே வழி?
மிதுலன்
'மச்சான்!' என்று கொண்டே மிதுலனிடம் திரும்பினான்.
அந்த மச்சான் தூங்கி அரை மணி நேரமாகியிருந்தது.
'நாளைக் காலை கொழும்பில் இறங்கியதும், தனக்குத் தெரியாமல் வெற்றிகரமாக நடந்து முடிந்த ஒரு காதல் பற்றி, அறைக்கு சென்று சேர்வதற்க்கிடையில் ரஜீவன் சொல்வான் என்றோ...
அதை, தான் இரண்டு நாட்கள் கழித்து ப்ளாக்கில் கதையாக எழுதி, அவன் மானத்தை கப்பல் ஏற்றுவேன் என்றோ...
எதுவுமே தெரியாமல் 'அனிருத் அன்ட்ரியாவுக்கு கொடுத்த முத்தம்' பற்றி ஆய்வுக்கனவு கண்டு கொண்டே தூங்கிகொண்டிருந்தது அந்த அப்பாவி ஜீவன்.
கதை முடிந்துவிட்டது.
இருந்தாலும் ஒரு நிமிஷம்!
இந்த வரி வரை பொறுமையாக வாசித்த உங்களுக்கு மிக்க நன்றி!
நீங்கள் இப்போது காலிமுகத்திடல் பக்கமோ அல்லது கங்காராம பக்கமோ போனால் அந்தப் புதிய இளம் காதல் ஜோடி குடையின் கீழ்18 வது திருத்தச் சட்டப் பிரிவுகள் பற்றியோ அல்லது உலக வெப்பமயமாதலின் விளைவுகள் பற்றியோ தீவிரமாக விவாதித்துக்கொண்டிருப்பதைக் காணலாம்.
அப்படி அவர்களைக் கண்டால் தயவு செய்து என் அறைத் திறைப்பை கொண்டுவந்து தந்துவிட்டு போய்க் காதல் செய்யுமாறு நான் சொன்னதாகவும்அறைக்குள் போக வழியில்லாததால் கொலைவெறியுடன் ஒரு நெட்கபேயிலிருந்து மாங்கு மாங்குன்னு அவர்களது காதல் சரித்திரத்தை கறுப்புச் சரித்திரமாக இணையத்தில் பதிவு செய்துகொண்டிருக்கிறேன் என்றும் சொல்லிவிடவும்!
முற்றும்
கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!
நியாயம்
முதல் நாள் மாலை ஆரம்பித்த மழை மறுநாள் காலை வரை விட்டபாடில்லை. பேத்தி அம்முவுக்கு இன்று பள்ளி விடுமுறை என்று டி.வி. செய்திகளில் வந்ததைப் பார்த்து,பார்வதி பாட்டி நிம்மதி அடைந்தாள். பேத்தியிடம் அதைச் சொல்ல, இன்னும் படுக்கையில் இருந்தே எழுந்திருக்காத அவள், மீண்டும் போர்வைக்குள் அடைக்கலம் புகுந்தாள்.
பேப்பர் படித்துக் கொண்டிருந்த பையன் பாலுவிடம் போனாள். ''ஏண்டா, பாலு, இந்த கொட்டற மழையில ட்ரைன்,பஸ்ஸேல்லாம் சரியா போகாதுடா. மழைல போய் மாட்டிக்காதேடா. நீ ஆப்பிசுக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லி லீவு போட்டுடுடா" என்றாள்.
காலேஜ் படிக்கிற பேரன் ரவியிடம் போய், ''காலேஜ் லீவுன்னு ஏதாச்சும் எஸ்.எம்.எஸ்.வந்துட்டுத்தாடா? ரோடெல்லாம் தண்ணியா இருக்கும். வண்டில போறது கஷ்டமாயிருக்கும்" என்றாள்.
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, சமையலறையில் பார்வதியம்மாள் கத்திக் கொண்டிருந்தது பாலுவின் காதில் விழுந்தது.
''இந்த வேலைக்காரிஎல்லாம் ரொம்ப மோசம். துளி மழை வந்தாலும் அதுதான் சாக்குன்னு லீவு போட்டுட வேண்டியது. எப்பப் பாரு, எதுக்கெடுத்தாலும் லீவு. இவங்கள திருத்தவே முடியாது...''
கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!
இப்படியான வாழ்விலே...
என்னை நீங்கள்
எங்கும் பார்த்திருக்கலாம்
நான் கோவிலுக்கு போனால்
செருப்பு காணாமல் போய்விடுகிறது
நான் திருமணத்துக்கு போனால்
பந்தி முடிந்து விடுகிறது
நான் நிதிநிறுவனத்தில் பணம் போட்டால்
சொல்லாமல் கூட ஓடி விடுகிறார்கள்
நான் நேர்மையாக சம்பாதித்தால்
கடன்காரர்கள் வந்துவிடுகிறார்கள்
நான் வீடு வாங்கினால்
வட்டி விகிதத்தை உயர்த்தி விடுகிறார்கள்
நான் வாகனம் வாங்கினால்
எரிபொருள் விலையை உயர்த்தி விடுகிறார்கள்
நான் ஒட்டு போட்டால்
மந்திரிசபையை கவிழ்த்து விடுகிறார்கள்
என்னை நீங்கள்
எங்கும் பார்த்திருக்கலாம்
நான் ஆசிரமத்துக்கு சென்றால்
அங்கு காவல்துறை நுழைந்து விடுகிறது
நான் ஊழல் செய்தால்
அங்கு சிபிஐ வந்து விடுகிறது
நான் நடிகன் ஆனால்
அங்கு நிருபர்கள் வந்து விடுகிறார்கள்
நான் உப்பு விற்க போனால்
மழை கொட்டி தீர்க்கிறது
நான் பொரி விற்க போனால்
காற்று வீசி தீர்க்கிறது
நான் நாய் வளர்த்தால்
அது பக்கத்து வீட்டு நாயோடு ஓடிவிடுகிறது
என்னை நீங்கள்
எங்கும் பார்த்திருக்கலாம்
நான் பிள்ளையார் பிடித்தால்
குரங்காய் மாறிவிடுகிறது
நான் கதை எழுதினால்
கந்தலாக மாறி விடுகிறது
நான் கவிதை எழுதினால்
அது எப்போதும்
இப்படித்தான் முடிந்து விடுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!
கமலும் பிரேமாவதியும்
வாங்க!
தலைப்பை பார்த்ததும் ஏதோ பலான விஷயம் என நம்பி வந்தீங்களா?
ஆண்டவர் உங்களுக்கு நல்ல சிந்தனைகளைக் கொடுக்கட்டும் !
இது நீங்கள் எதிர்பார்ப்பது போன்ற விடயம் அல்ல.
உலக நாயகனின் வாழ்வில் நடந்த ஒரு அழகான சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் அக்கடமியின் சார்பில்,ஆந்திர மகிள சபா,க்ளார்க் காது கேளாதோர் பள்ளி,அவ்வை இல்லம் போன்றவற்றைச் சேர்ந்து உடல் ஊனமுற்ற மாணவர்களுடன் " நேருக்கு நேர் " நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் நடிகர் கமல்ஹாசன்.
"என்னைப் பொறுத்தவரையில் நீங்க ஊனமுற்றவங்க இல்ல.இந்த நூற்றாண்டில் உங்களைன்னு யாராவது சொன்னா,அவங்க தேசத் துரோகிகள்!' என்று உணர்ச்சிவசப்பட்ட கமலிடம் மாணவர்கள் சரமாரியாக கேள்விகேட்டனர்.
"அப்புவா நடிச்சது எப்படி?"
"தொப்பிகுள்ள இருந்து புறா எப்படி வந்ததுன்னு கேட்டா,மந்திரவாதி சொல்லாமாட்டான்.அந்த மாதிரி தான் இதுவும்.ஆனா, இதுல மந்திரம் இல்ல...தந்திரம்தான்!"
"நீங்க ஊனமுற்றவரா நடிச்சிருக்கீங்களா?"
"நடிச்சிருக்கன்.அதாவது படிக்காதவனா!
"உங்கள் இளமையின் ரகசியம் என்ன?" என்று ஒரு பெண் கேட்க...
''பத்து வருஷம் கழிச்சு நீங்க இதே கேள்விய கேட்டா பத்தாயிரம் ரூபா தாரேன்!" என்றார் கமல்.
"நீங்க என்னை அப்போ ஞபகம் வச்சிருப்பீங்களா?" என அந்தப் பெண் எதிர்க் கேள்வி கேட்டார்.
கமல் புன்முறுவல் பூத்தார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்தப் பெண் கமலிடம்.
"என் பெயர் ஞபகம் இருக்கா?" என்றார்.
"ஞபகம் இல்லையே..." என ஜோசித்தார் கமல்.
பத்து நிமிஷத்திலேயே இப்பிடின்னா...பத்து வருஷம் கழிச்சு மட்டும் எப்படி ஞபகம் இருக்கும்?"
"பத்து வருஷம் கழிச்சு நீங்க வந்தா, 'பிரேமாவதி' ன்னு கரெக்டா சொல்லுவேன்!" என கமலுக்கே உரிய குறும்புடன் அவரை மடக்க,மாணவர்கள் கைதட்டலில் குஷி!
கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!
யாரோ நினைக்கிறார்கள்!
இந்த
இடி சத்தத்துக்கு
அவளும் பயந்திருப்பாளோ?!
சுஜாதா
கவிதா பத்மா உஷா
அப்புறம் கீதா
இவை எல்லாம்
வெறும் பெயர்கள் அல்ல
இரண்டு விசயங்கள் மட்டும்
அப்பிடியே மனதில் நிற்கிறது
முதன் முதலில் கடல் பார்த்ததுகவிதா பார்த்தது
ஒரு சிங்கத்தை
காதலித்திருதால் கூட இந்நேரம்
சொல்லியிருப்பேன்
விக்கல் வரும்போதெல்லாம்
அம்மா சொல்கிறாள்
யாரோ நினைக்கிறார்கள் என்று
கோபம் கோபமாக வருகிறது
யாரோவா நீ?
அது என்ன
அந்தப் புறா
சொல்லிவைத்த மாதிரி
உன்வீட்டுக்கும்என்வீட்டுக்குமாய்ப் பறக்கிறது?
நீ ஊரில் இல்லை
அது தெரியாமல்
திருவிழா கொண்டாடுகிறார்கள்
இன்னும் என்ன வேண்டி
கோவிலுக்கு
வருகிறாய்?
நீ வடம் பிடிப்பதற்க்கு
முன்னதாகவே
நகர ஆரம்பித்துவிடுகிறது தேர்
நல்ல வேளை
எனக்கான தண்டனை முடிந்த பிறகு
நீ வகுப்பறைக்குள் வந்தாய்
தேவை இல்லாமல்
குழப்பம் விளைவிக்கிறாய்
எல்லா திருமண வீடுகளிலும்!
இடி சத்தத்துக்கு
அவளும் பயந்திருப்பாளோ?!
சுஜாதா
கவிதா பத்மா உஷா
அப்புறம் கீதா
இவை எல்லாம்
வெறும் பெயர்கள் அல்ல
இரண்டு விசயங்கள் மட்டும்
அப்பிடியே மனதில் நிற்கிறது
முதன் முதலில் கடல் பார்த்ததுகவிதா பார்த்தது
ஒரு சிங்கத்தை
காதலித்திருதால் கூட இந்நேரம்
சொல்லியிருப்பேன்
விக்கல் வரும்போதெல்லாம்
அம்மா சொல்கிறாள்
யாரோ நினைக்கிறார்கள் என்று
கோபம் கோபமாக வருகிறது
யாரோவா நீ?
அது என்ன
அந்தப் புறா
சொல்லிவைத்த மாதிரி
உன்வீட்டுக்கும்என்வீட்டுக்குமாய்ப் பறக்கிறது?
நீ ஊரில் இல்லை
அது தெரியாமல்
திருவிழா கொண்டாடுகிறார்கள்
இன்னும் என்ன வேண்டி
கோவிலுக்கு
வருகிறாய்?
நீ வடம் பிடிப்பதற்க்கு
முன்னதாகவே
நகர ஆரம்பித்துவிடுகிறது தேர்
நல்ல வேளை
எனக்கான தண்டனை முடிந்த பிறகு
நீ வகுப்பறைக்குள் வந்தாய்
தேவை இல்லாமல்
குழப்பம் விளைவிக்கிறாய்
எல்லா திருமண வீடுகளிலும்!
கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!
நீலத் தாவணியணிந்த அக்கா
திருவிழாவில்
தவறிப்போன சிறுவன்
தன் அக்காவைத் தேடி
கூட்டத்தில்
அழுதுகொண்டே நிற்கிறான்
அக்கா நீலத் தாவணி
அணிந்தவள் என்பதைத் தவிர
அவனுக்குச் சொல்ல
எதுவுமே இல்லை
நீலத்தாவணி அணிந்த அக்கா
ஒரு நீல நிழலைப்போல
இந்தக் கூட்டத்தில் எங்கோ
மறைந்து நிற்கிறாள்
இத்தனை ஆயிரம் ஜனங்கள்
நடக்கும் இந்தப் பாதையில்
ஒரு நீலத் தாவணி அணிந்தவளைத்தேடி
நடையாய் நடக்கிறேன்
நீலக் கண்களுடையவளைப் பார்த்தேன்
நீலம் பாரித்த உதடுள்ளவளைப் பார்த்தேன்
நீல மலர்களைச் சூடியவளைப் பார்த்தேன்
நீலத் தழும்புள்ளவளைப் பார்த்தேன்
நீலக் கல் மூக்குத்தியணிந்தவளைப் பார்த்தேன்
ஒரு நீலத் தாவணியணிந்தவளைத் தவிர
நீலத்தோடு தொடர்புடைய
எல்லாப் பெண்களையும் பார்த்தேன்
ஒரு குழந்தை
கூட்டத்தில் காணாமல் போகிறான்
அவனது நீலத் தாவணியணிந்த அக்கா
ஆகாயத்தின் நீலத்தால் கவரப்பட்டிருக்க வேண்டும்
அல்லது கடலின் நீலத்தால் குடிக்கப்பட்டிருக்கவேண்டும்
சிறுவன் அழுதுகொண்டே இருக்கிறான்.
நான் எனது எல்லா லட்சியங்களையும் கைவிட்டு
ஒரு நீலத் தாவணியணிந்தவளைத் தேடுகிறேன்
இந்த உலகின் மகத்தான துயரம் ஒன்றை
எப்படியும் தீர்த்துவிடுவேன் என்றுதான் நம்புகிறேன்.
நீலத்தாவணி அணிந்த அக்கா
ஒரு கடையில் நிதானமாக
இளநீர் குடித்துக்கொண்டிருக்கிறாள்
சிறுவன் அழுதுகொண்டே
அவளை நோக்கி ஓடுகிறான்
அவள் தனது நீலத் தாவணியால்
அவனது கண்களை சமாதானமாகத் துடைக்கிறாள்
என் நீலத் தாவணியணிந்த அக்காவைத்
தொலைத்துவிட்டு...
-------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!
சிறுமியும் தேவதையும்
தீடிரென்று...
மேகங்கள் கூடிப்
புதைத்தன வானை
ஒரே திசையில் வீசலாயிற்று
உலகக் காற்று
பூனை உருட்டிய கண்ணாடிகுடமாய்
உருண்டது பூமி
மருண்டது மானுடம்
அப்போதுதான்
அதுவும் நிகழ்ந்தது
வான் வெளியில்
ஒரு வைரக்கோடு
கோடு வளர்ந்து
வெளிச்சமானது
வெளிச்சம் விரிந்து
சிறகு முளைத்த தேவதையானது
சிறகு நடுங்க
தேவதை சொன்னது
"48 மணி நேரத்தில்
உலகப்பந்து கிழியப்போகிறது
ஏறுவோர் ஏறுக என் சிறகில்
இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன்
இரண்டே இரண்டு
நிபந்தனைகள்;
எழுவர் மட்டுமே ஏறலாம்
உமக்கு பிடித்த ஒரு பொருள் மட்டும்
உடன் கொண்டு வரலாம்'
புஜவலியுள்ள இளைஞன் ஒருவன்
சிறகு நொறுங்க ஏறினான்
அவன் கையில்
இறந்த காதலியின்
உடைந்த வளையல்கள்
முதல் முத்தது ஞபகத்துன்டு
"இன்னொரு கிரகம் கொண்டான்
என்றென்றும் வாழ்க'
கொட்டிமுழங்கும் கோஷத்தோடு
சிறகேறினார் அரசியல்வாதி
தங்க கடிகாரம் கழற்றியெறிந்து
களிம்பேறிய கடிகாரம் கட்டிக்கொண்டார்
உள்ளே துடித்தது -
சுவிஸ் வங்கியின்
ரகசியக் கணக்கு.
இறந்துவிடவில்லையென்ற சோகத்தை
இருமி இருமியே
மெய்ப்பித்துக்கொண்டிருக்கும்
நோயாளி ஒருவர்
ஜனத்திரள் பிதுங்கியத்தில்
சிறகொதுங்கினார்
அவர் கையில்
மருந்து புட்டி
அதன் அடிவாரத்தில்
அவரின்
அரை அவுன்ஸ் ஆயுள்
அனுதாப அலையில்
ஒரு கவிஞனும் சிறகு தொற்றினான்
ஜோல்னாப் பையில் -
அச்சுப் பிழையோடு வெளிவந்த
முதல் கவிதை
தன் மெல்லிய ஸ்பரிசங்களால்
கூட்டம் குழப்பி வலிசெய்து
குதித்தால் ஒரு சீமாட்டி
கலைந்த ஆடை சரி செய்ய மறந்து
கலைந்த கூந்தல் சரி செய்தாள்
கைப் பையில்
அமெரிக்க வங்கிக் கடன் அட்டை
கசங்காத காக்கிச் சட்டையில்
கசங்கிபோன ஒரு போலீஸ்காரி
லத்தியால் கூட்டம் கிழித்துப்
பொத்தென்று சிறகில் குதித்தாள்
லத்தியை வீசியெறிந்தாள் - ஒரு
புல்லாங்குழல் வாங்கிகொண்டாள்
'ஒருவர்
இன்னும் ஒரே ஒருவர்
என்றது தேவதை
கூட்டத்தில்
சிற்றாடை சிக்கிய
சிறுமியொருத்தி
பூவில் ரத்தஓட்டம்
புகுந்தது போன்றவள்
செல்ல நாய்க்குடியோடு
சிறகில் விழுந்தாள்
'நாய்க்குட்டியென்பது
பொருள் அல்ல - உயிர்
இறக்கிவிடு'
என்றது தேவதை
'நாய் இருக்கட்டும்
நானிறங்கி கொள்கிறேன்'
என்றானால் சிறுமி
சிறகு சிலிர்த்தது தேவதைக்கு
சிலிர்த்த வேகத்தில்
சிதறி விழுந்தனர் சிறகேறிகள்
வான் பறந்தது தேவதை
சிறுமியோடும் செல்ல நாயோடும்
.
மேகங்கள் கூடிப்
புதைத்தன வானை
ஒரே திசையில் வீசலாயிற்று
உலகக் காற்று
பூனை உருட்டிய கண்ணாடிகுடமாய்
உருண்டது பூமி
மருண்டது மானுடம்
அப்போதுதான்
அதுவும் நிகழ்ந்தது
வான் வெளியில்
ஒரு வைரக்கோடு
கோடு வளர்ந்து
வெளிச்சமானது
வெளிச்சம் விரிந்து
சிறகு முளைத்த தேவதையானது
சிறகு நடுங்க
தேவதை சொன்னது
"48 மணி நேரத்தில்
உலகப்பந்து கிழியப்போகிறது
ஏறுவோர் ஏறுக என் சிறகில்
இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன்
இரண்டே இரண்டு
நிபந்தனைகள்;
எழுவர் மட்டுமே ஏறலாம்
உமக்கு பிடித்த ஒரு பொருள் மட்டும்
உடன் கொண்டு வரலாம்'
புஜவலியுள்ள இளைஞன் ஒருவன்
சிறகு நொறுங்க ஏறினான்
அவன் கையில்
இறந்த காதலியின்
உடைந்த வளையல்கள்
முதல் முத்தது ஞபகத்துன்டு
"இன்னொரு கிரகம் கொண்டான்
என்றென்றும் வாழ்க'
கொட்டிமுழங்கும் கோஷத்தோடு
சிறகேறினார் அரசியல்வாதி
தங்க கடிகாரம் கழற்றியெறிந்து
களிம்பேறிய கடிகாரம் கட்டிக்கொண்டார்
உள்ளே துடித்தது -
சுவிஸ் வங்கியின்
ரகசியக் கணக்கு.
இறந்துவிடவில்லையென்ற சோகத்தை
இருமி இருமியே
மெய்ப்பித்துக்கொண்டிருக்கும்
நோயாளி ஒருவர்
ஜனத்திரள் பிதுங்கியத்தில்
சிறகொதுங்கினார்
அவர் கையில்
மருந்து புட்டி
அதன் அடிவாரத்தில்
அவரின்
அரை அவுன்ஸ் ஆயுள்
அனுதாப அலையில்
ஒரு கவிஞனும் சிறகு தொற்றினான்
ஜோல்னாப் பையில் -
அச்சுப் பிழையோடு வெளிவந்த
முதல் கவிதை
தன் மெல்லிய ஸ்பரிசங்களால்
கூட்டம் குழப்பி வலிசெய்து
குதித்தால் ஒரு சீமாட்டி
கலைந்த ஆடை சரி செய்ய மறந்து
கலைந்த கூந்தல் சரி செய்தாள்
கைப் பையில்
அமெரிக்க வங்கிக் கடன் அட்டை
கசங்காத காக்கிச் சட்டையில்
கசங்கிபோன ஒரு போலீஸ்காரி
லத்தியால் கூட்டம் கிழித்துப்
பொத்தென்று சிறகில் குதித்தாள்
லத்தியை வீசியெறிந்தாள் - ஒரு
புல்லாங்குழல் வாங்கிகொண்டாள்
'ஒருவர்
இன்னும் ஒரே ஒருவர்
என்றது தேவதை
கூட்டத்தில்
சிற்றாடை சிக்கிய
சிறுமியொருத்தி
பூவில் ரத்தஓட்டம்
புகுந்தது போன்றவள்
செல்ல நாய்க்குடியோடு
சிறகில் விழுந்தாள்
'நாய்க்குட்டியென்பது
பொருள் அல்ல - உயிர்
இறக்கிவிடு'
என்றது தேவதை
'நாய் இருக்கட்டும்
நானிறங்கி கொள்கிறேன்'
என்றானால் சிறுமி
சிறகு சிலிர்த்தது தேவதைக்கு
சிலிர்த்த வேகத்தில்
சிதறி விழுந்தனர் சிறகேறிகள்
வான் பறந்தது தேவதை
சிறுமியோடும் செல்ல நாயோடும்
.
கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!
கதவுகளுக்குப் பின்னால்...
தயவு செய்து
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்!
நான் அப்போதுதான்
என் ஆடைகளை
அவிழ்க்கத் தொடங்கியிருக்கலாம்
நான் அப்போதுதான்
அழத் தொடங்கியிருக்கலாம்
நான் அப்போதுதான்
என் சிசுவுக்கு
முலையூட்டத் தொடங்கியிருக்கலாம்
நான் அப்போதுதான்
ரத்தக் கறைபடிந்த
என் கொலைக்கருவியை
பார்க்கத் தொடங்கியிருக்கலாம்
தயவு செய்து
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்
நான் விதைக்குள் தவிக்கும்
ஒரு தளிரை விடுவித்துக்கொண்டிருக்கக்கூடும்
நான் ஒரு பறவையின் மனதை அறிய
ஒரு கிளிக்கு
பேச்சுப் பழக்கிக்கொண்டிருக்கக்கூடும்
நான் சுவரில் தொங்கும் ஒரு கடிகாரத்தையே
பார்த்துக்கொண்டிருக்கக்கூடும்
நான் ஒரு கனவின் பாதி வழியில்
நின்றுகொண்டிருக்கக்கூடும்
தயவுசெய்து
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்
யாரேனும் ஒருவர்
பார்க்கக் கூடாத ஒன்றைப்
பார்த்துக்கொண்டிருக்கலாம்
யாரேனும் ஒருவர்
கேட்கக் கூடாத ஒன்றைக்
கேட்டுக்கொண்டிருக்கலாம்
யாரேனும் ஒருவர்
திறக்கக் கூடாத ஒன்றைத்
திறந்துகொண்டிருக்கலாம்
யாரேனும் ஒருவர்
இழக்கக் கூடாத ஒன்றை
இழந்துகொண்டிருக்கலாம்
தயவு செய்து
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்
இன்னும் கொஞ்ச நேரத்தில்
இந்த அற்ப சாகசங்கள் முடிவுக்கு வந்துவிடும்
இன்னும் கொஞ்ச நேரத்தில்
பாதிப் பைத்தியம் தெளிந்துவிடும்
இன்னும் கொஞ்ச நேரத்தில்
இசைத் தட்டுகள் நின்றுவிடும்
இன்னும் கொஞ்ச நேரத்தில்
ஒரு கதவை மூடிவைக்கும்
எல்லா தேவைகளும் விலகிவிடும்
தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு
உள்ளே வரவும்
கடவுள் உங்களை
மன்னிக்க மாட்டார்
ஒரு சுருக்குக் கயிற்றின்
கடைசி முடிச்சை போடுவதை
நீங்கள் தடுத்து விடும்போது
கடவுள் உங்களை
ஏற்றுக்கொள்ள மாட்டார்
ஒரு விடைபெறும் முத்தத்தின் பாதையில்
நீங்கள் குறுக்கிட்டுவிடும்போது
கடவுள் உங்களோடு
பேசுவதை நிறுத்திவிடுவார்
எல்லா உணர்ச்சிகளையும் நீங்கள்
கடவுள் உங்களுக்கு
கதவு திறக்க மறுத்துவிடுவார்
நீங்கள் மூடப்பட்ட ஒரு அறையின் கதவுகளை
இவ்வளவு சந்தேகத்துடன் பார்க்கும்போது
தயவு செய்து
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்!
கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!
நிகழ்ச்சித் தொகுப்பாளினியின் ஒரு மணி நேரம்!

தொலைக்காட்சி வரலாற்றில்
ஆயிரத்து ஆயிரமாவது முறையாகச் சொல்லப்படும்
அழகுக் குறிப்பை
அருமை என்கிறாள்.
நலம் விசாரிப்பவர்களிடம்
நலமாயிருப்பதாகச்
சொல்லியே
நலமிழக்கிறாள்.
ஆபாசப் பாடலைப் பாடிக்காட்டும்
பால்வாடிகளிடம்
கீப் இட் உப என்கிறாள்.
கவிதை சொல்கிறேன் என்று
உளருபவகளிடம்
ஆஹாவெனக்
கைதட்டுகிறாள்.
'அழகாயிருக்கீங்க' என்பதற்க்கும்
'டிரஸ் நல்லாயிருக்கு' என்பதற்க்கும்
அவஸ்த்தையாகச் சிரிக்கிறாள்.
பாடுவதாகச் சொல்லி
கத்துபவர்களிடம்
கட்டை விரல் உயர்த்தி
'சுப்பர்ப்'என்கிறாள்.
முன்வந்து விழும்
முடியை
முப்பத்தி இரண்டாவது முறையாகப்
பினியிழுத்து விடுகிறாள்.
வெறுபேற்றும்
அறுவை மன்னர்களிடம்..
பேசியதில் மகிழ்ச்சி என்று
சொல்லிவிட்டு...
அடுத்த நாளும்
அதே நேரம்
அதே நிகழ்ச்சியில்
சந்திப்பதாகக் கூறி
விடைபெறும்
அவளைப்பார்க்க பாவமாகத்தான் இருக்கிறது!
அழகுக் குறிப்பை
அருமை என்கிறாள்.
நலம் விசாரிப்பவர்களிடம்
நலமாயிருப்பதாகச்
சொல்லியே
நலமிழக்கிறாள்.
ஆபாசப் பாடலைப் பாடிக்காட்டும்
பால்வாடிகளிடம்
கீப் இட் உப என்கிறாள்.
கவிதை சொல்கிறேன் என்று
உளருபவகளிடம்
ஆஹாவெனக்
கைதட்டுகிறாள்.
'அழகாயிருக்கீங்க' என்பதற்க்கும்
'டிரஸ் நல்லாயிருக்கு' என்பதற்க்கும்
அவஸ்த்தையாகச் சிரிக்கிறாள்.
பாடுவதாகச் சொல்லி
கத்துபவர்களிடம்
கட்டை விரல் உயர்த்தி
'சுப்பர்ப்'என்கிறாள்.
முன்வந்து விழும்
முடியை
முப்பத்தி இரண்டாவது முறையாகப்
பினியிழுத்து விடுகிறாள்.
வெறுபேற்றும்
அறுவை மன்னர்களிடம்..
பேசியதில் மகிழ்ச்சி என்று
சொல்லிவிட்டு...
அடுத்த நாளும்
அதே நேரம்
அதே நிகழ்ச்சியில்
சந்திப்பதாகக் கூறி
விடைபெறும்
அவளைப்பார்க்க பாவமாகத்தான் இருக்கிறது!

கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!
யானைக்கனவு
கனவில்
யானை துரத்தத்
திடுக்கிட்டு விழித்தேன் -
தூக்கம் கலைந்தது.
யானை கனவு
நல்லதென
நம்பிக்கை அளித்தாள் பாட்டி.
எதற்க்கும்
பிள்ளையாருக்கு
ஒரு அர்ச்சனை பண்ணிவிடு
என்றாள் அம்மா.
கனவுகளுக்கு எல்லாம் அர்த்தம் தேடி
அலையாதே
அரியர் பேப்பர்சை
கிளியர் சியைப் பார்
அட்வைஸ் வழங்கினார்
அப்பா.
'யானை' என்பது
காமத்தின் குறியீடு
உன் காமமே
உன்னைக் கனவில் துரத்துகிறது'
உளவியல் படித்த நபனின்
உளறல் இது.
இப்படியாகவும்
இன்னுமாகவும்
கனவு குறித்த
கணிப்புக்கும்
கவலைகளும்
ஒருநாள் எதிர் வந்தது
ஒப்பிலியப்பன் கோயில் யானை
பயந்து நடுங்கி விலகுகையில்
தும்பிக்கை துக்கி
ஆசிவதித்தது.
நல்ல வேலையை
என்னை துரத்துவதுபோல்
கனவேதும் கண்டிருக்கவில்லை
யானை!

திடுக்கிட்டு விழித்தேன் -
தூக்கம் கலைந்தது.
யானை கனவு
நல்லதென
நம்பிக்கை அளித்தாள் பாட்டி.
எதற்க்கும்
பிள்ளையாருக்கு
ஒரு அர்ச்சனை பண்ணிவிடு
என்றாள் அம்மா.
கனவுகளுக்கு எல்லாம் அர்த்தம் தேடி
அலையாதே
அரியர் பேப்பர்சை
கிளியர் சியைப் பார்
அட்வைஸ் வழங்கினார்
அப்பா.
'யானை' என்பது
காமத்தின் குறியீடு
உன் காமமே
உன்னைக் கனவில் துரத்துகிறது'
உளவியல் படித்த நபனின்
உளறல் இது.
இப்படியாகவும்
இன்னுமாகவும்
கனவு குறித்த
கணிப்புக்கும்
கவலைகளும்
ஒருநாள் எதிர் வந்தது
ஒப்பிலியப்பன் கோயில் யானை
பயந்து நடுங்கி விலகுகையில்
தும்பிக்கை துக்கி
ஆசிவதித்தது.
நல்ல வேலையை
என்னை துரத்துவதுபோல்
கனவேதும் கண்டிருக்கவில்லை
யானை!

கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!
அவ என் ஆளுடா மச்சான்!
குழந்தை 01 :- மச்சான் நேற்று இரவு முழுதும் தூக்கமே இல்லடா!!!
நான் ரொம்பவும் அப்செட்டா இருக்கன்டா!!!
குழந்தை 02 :- ஏன் மச்சான்? வீட்ல ஏதும் ப்ரோம்ப்ளமா?
குழந்தை 01 :- இல்ல மச்சான் நேற்று TOYS வாங்க கடைக்கு போயிருந்தேன். அங்க ஒரு செம பிகருடா! ஒரு மூணு வயசு இருக்கும்... அவங்க அம்மா மடியில படுத்திருந்து, வாயில விரல வச்சு என்ன பார்த்து சிரிச்சா... ஐயோ ஐயோ என்னால முடியலடா!!!
குழந்தை 02 :- அப்புறம் என்ன மச்சான் ஆச்சு??
குழந்தை 01 :- நான் பலூன் எல்லாம் வச்சு செம சீன எல்லாம் போட்டன் மச்சான், அவ கண்டுக்கவே இல்லடா மச்சான்... ரெண்டு நாளா “CERELAC” கூட ஒழுங்கா சாப்பிட முடியல மச்சி!!!! என்னா பீலிங்க்ஸ் தெரியுமா? ?அவ என் அஞ்சல மச்சி ??
குழந்தை 02 :- விடு மச்சி அவல அவ வீட்டுக்கே போய் தொட்டிலோட தூக்கிடுவோம்!!!.....
இந்த "வாண்டுகள்(வாரணம்) ஆயிரம்" பிடிச்சிருந்தா
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!
பால் வினையாளி
உட்கார்
பெயர் சொல்
பெண்ணே...
அப்பா அம்மா இட்டது
மகாலட்சுமி
மாமா சூட்டியது
சுகப்ரியா
தொழில்....?மாமா சூட்டியது
சுகப்ரியா
உலகின் மிகப் பழமையான தொழில்
வயது....?
ஆறு வருடமாய் பதினாறு
எடை....?
எடை பார்க்கும் இயந்திரம் எடை பார்ப்பதில்லை
உயரம்....? வறுமைக்கோட்டில் தலைதட்டும் உயரம்
நிறம்....?
மாறிக் கொண்டேயிருக்கும்
உன் போன்றோர் தோன்ற ஏது காரணம்?
செல்வத்தின் எச்சமும்
வறுமையின் உச்சமும்
இதில் சகிக்க முடியாதது....?
இங்கே வந்து வீடு நினைத்து
ஆண்கள் சிலர் அழுவது
அதிகம் கேட்ட பொய்கள்?
மீண்டும் சந்திப்போம்
இலக்கியப் பரிச்சயம்?
குறள் கூட ஒன்று சொல்வேன்.
காதாரச் சொல் கேட்போம்..
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
உச்சத்தாற் காண படும்.
இரைப்பை நிரப்பவா கருப்பையை பட்டினியிட்டாய்?
சில உறுப்புக்கள் அநாவசியம்
குடல்வால்
இரண்டாம் கிட்னி
ஆறாம் விரல்
எனக்கு கருப்பை
எதுவரைக்கும் இத்தொழில்?
திருமணம்-எய்ட்ஸ்
இரண்டிலொன்று முந்தும்வரை
....
பூமியின் மீதொரு கண்ணீர்த்துளி
முதல் விலைமகள் அழுததுளி
சாத்திரம் மதம் சட்டம் இலக்கியம்
எல்லா விரல்களும் துடைக்கப்போய்
ஆசிவதித்த அதே துளி
முட்டையிட்டு முட்டையிட்டுக்
கடலாய் பழகிய கண்ணீர்த்துளி
மாறும் உலகில் மாறாத ஒன்றாய்
மாதவி மகளொருத்தி
கண்ணகியானால்கண்ணகி மகளொருத்தி
மாதவியானால்...
மீண்டும்
ஈரம் சேராத முத்தம்
மூலம் சேராத தழுவல்
ஓட்ட வைத்த புன்னகை
ஒலிப்பதிவுப் பேச்சு அவரவர் தேவை தீர்ந்தும்
அவள் தேவை தீராத வெறுமை
சிகரெட் வாசனை கழிய
சற்றே திறந்த ஜன்னல்வழி கசியும்
'பெண்ணுரிமை கோஷங்கள்'
ஜன்னல் இழுத்தடைத்து தயாராகிறாள்
இன்னொரு பந்திக்கு
இலை கழுவ.
...