நியாயம்
முதல் நாள் மாலை ஆரம்பித்த மழை மறுநாள் காலை வரை விட்டபாடில்லை. பேத்தி அம்முவுக்கு இன்று பள்ளி விடுமுறை என்று டி.வி. செய்திகளில் வந்ததைப் பார்த்து,பார்வதி பாட்டி நிம்மதி அடைந்தாள். பேத்தியிடம் அதைச் சொல்ல, இன்னும் படுக்கையில் இருந்தே எழுந்திருக்காத அவள், மீண்டும் போர்வைக்குள் அடைக்கலம் புகுந்தாள்.


பேப்பர் படித்துக் கொண்டிருந்த பையன் பாலுவிடம் போனாள். ''
ண்டா, பாலு, இந்த கொட்டற மழையில ட்ரைன்,பஸ்ஸேல்லாம் சரியா போகாதுடா. மழைல போய் மாட்டிக்காதேடா. நீ ஆப்பிசுக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லி லீவு போட்டுடுடா" என்றாள்.


காலேஜ் படிக்கிற பேரன் ரவியிடம் போய், ''
காலேஜ் லீவுன்னு ஏதாச்சும் எஸ்.எம்.எஸ்.வந்துட்டுத்தாடா? ரோடெல்லாம் தண்ணியா இருக்கும். வண்டில போறது கஷ்டமாயிருக்கும்" என்றாள்.


ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, சமையலறையில் பார்வதியம்மாள் கத்திக் கொண்டிருந்தது பாலுவின் காதில் விழுந்தது.
''இந்த வேலைக்காரிஎல்லாம் ரொம்ப மோசம். துளி மழை வந்தாலும் அதுதான் சாக்குன்னு லீவு போட்டுட வேண்டியது. எப்பப் பாரு, எதுக்கெடுத்தாலும் லீவு. இவங்கள திருத்தவே முடியாது...''

கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!

1 ◄◄ கழுவிக் கழுவி ஊத்த ►►:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை...

திருந்த வேண்டியவர்கள் யார்...?

நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

Post a Comment

♥ நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க ♥

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜில்லென்று ஒரு Website!