இப்படியான வாழ்விலே...


என்னை நீங்கள்

எங்கும் பார்த்திருக்கலாம்

நான் கோவிலுக்கு போனால்

செருப்பு காணாமல் போய்விடுகிறது


நான் திருமணத்துக்கு போனால்
பந்தி முடிந்து விடுகிறது


நான் நிதிநிறுவனத்தில் பணம் போட்டால்
சொல்லாமல் கூட ஓடி விடுகிறார்கள்


நான் நேர்மையாக சம்பாதித்தால்

கடன்காரர்கள் வந்துவிடுகிறார்கள்


நான் வீடு வாங்கினால்

வட்டி விகிதத்தை உயர்த்தி விடுகிறார்கள்


நான் வாகனம் வாங்கினால்

எரிபொருள் விலையை உயர்த்தி விடுகிறார்கள்


நான் ஒட்டு போட்டால்

மந்திரிசபையை கவிழ்த்து விடுகிறார்கள்


என்னை நீங்கள்

எங்கும் பார்த்திருக்கலாம்


நான் ஆசிரமத்துக்கு சென்றால்

அங்கு காவல்துறை நுழைந்து விடுகிறது


நான் ஊழல் செய்தால்

அங்கு சிபிஐ வந்து விடுகிறது


நான் நடிகன் ஆனால்

அங்கு நிருபர்கள் வந்து விடுகிறார்கள்


நான் உப்பு விற்க போனால்

மழை கொட்டி தீர்க்கிறது


நான் பொரி விற்க போனால்

காற்று வீசி தீர்க்கிறது


நான் நாய் வளர்த்தால்

அது பக்கத்து வீட்டு நாயோடு ஓடிவிடுகிறது


என்னை நீங்கள்

எங்கும் பார்த்திருக்கலாம்


நான் பிள்ளையார் பிடித்தால்

குரங்காய் மாறிவிடுகிறது


நான் கதை எழுதினால்

கந்தலாக மாறி விடுகிறது


நான் கவிதை எழுதினால்

அது எப்போதும்
இப்படித்தான் முடிந்து விடுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!

1 ◄◄ கழுவிக் கழுவி ஊத்த ►►:

manoharan said...

அருமையான கவிதை. வாழ்க்கையிலேயே முடிவு ஒன்று தானே நிச்சயம்.

இது முடிந்தாலும் மற்றொன்று தொடரட்டும்.

மனோகர்

Post a Comment

♥ நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க ♥

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜில்லென்று ஒரு Website!