யானைக்கனவு


கனவில்
யானை துரத்தத்
திடுக்கிட்டு விழித்தேன் -
தூக்கம் கலைந்தது.

யானை கனவு
நல்லதென
நம்பிக்கை அளித்தாள் பாட்டி.

எதற்க்கும்
பிள்ளையாருக்கு
ஒரு அர்ச்சனை பண்ணிவிடு
என்றாள் அம்மா.

கனவுகளுக்கு எல்லாம் அர்த்தம் தேடி
அலையாதே
அரியர் பேப்பர்சை
கிளியர் சியைப் பார்
அட்வைஸ் வழங்கினார்
அப்பா.

'யானை' என்பது
காமத்தின் குறியீடு
உன் காமமே
உன்னைக் கனவில் துரத்துகிறது'
உளவியல் படித்த நபனின்
உளறல் இது.

இப்படியாகவும்
இன்னுமாகவும்
கனவு குறித்த
கணிப்புக்கும்
கவலைகளும்

ஒருநாள் எதிர் வந்தது
ஒப்பிலியப்பன் கோயில் யானை
பயந்து நடுங்கி விலகுகையில்
தும்பிக்கை துக்கி
ஆசிவதித்தது.

நல்ல வேலையை
என்னை துரத்துவதுபோல்
கனவேதும் கண்டிருக்கவில்லை
யானை!









கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!

0 ◄◄ கழுவிக் கழுவி ஊத்த ►►:

Post a Comment

♥ நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க ♥

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜில்லென்று ஒரு Website!