நிகழ்ச்சித் தொகுப்பாளினியின் ஒரு மணி நேரம்!


தொலைக்காட்சி வரலாற்றில்
ஆயிரத்து ஆயிரமாவது முறையாகச் சொல்லப்படும்
அழகுக் குறிப்பை
அருமை என்கிறாள்.

நலம் விசாரிப்பவர்களிடம்
நலமாயிருப்பதாகச்
சொல்லியே
நலமிழக்கிறாள்.

ஆபாசப் பாடலைப் பாடிக்காட்டும்
பால்வாடிகளிடம்
கீப் இட் உப என்கிறாள்.

கவிதை சொல்கிறேன் என்று
உளருபவகளிடம்
ஆஹாவெனக்
கைதட்டுகிறாள்.

'அழகாயிருக்கீங்க' என்பதற்க்கும்
'டிரஸ் நல்லாயிருக்கு' என்பதற்க்கும்
அவஸ்த்தையாகச் சிரிக்கிறாள்.

பாடுவதாகச் சொல்லி
கத்துபவர்களிடம்
கட்டை விரல் உயர்த்தி
'சுப்பர்ப்'என்கிறாள்.

முன்வந்து விழும்
முடியை
முப்பத்தி இரண்டாவது முறையாகப்
பினியிழுத்து விடுகிறாள்.


வெறுபேற்றும்
அறுவை மன்னர்களிடம்..
பேசியதில் மகிழ்ச்சி என்று
சொல்லிவிட்டு...
அடுத்த நாளும்
அதே நேரம்
அதே நிகழ்ச்சியில்
சந்திப்பதாகக் கூறி
விடைபெறும்
அவளைப்பார்க்க பாவமாகத்தான் இருக்கிறது!கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!

2 ◄◄ கழுவிக் கழுவி ஊத்த ►►:

goma said...

பாவம், அவர் இல்லை,எந்திரத்தனமான பதிலுக்கும் சிரிப்புக்கும் மயங்கி ஃபோன் மேல் ஃபோன் போட்டு அவரிடம் பேச முண்டி அடிக்கும், நேயர்கள்தான் ,பாவத்திலும் பாவம்

குறுக்காலபோவான் said...

gomaஅதுவும் உண்மைதான்!
நீங்கள் பெப்சி உமாவை மட்டும் மனதில் வைத்து பேசுகிறீர்களோ?!
இப்பொழுது புதிதாக வந்திருக்கும் தொகுப்பாளினிகளின் நிலைமைதான் மேற்சொன்ன கவிதை.

Post a Comment

♥ நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க ♥

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜில்லென்று ஒரு Website!