யாரோ நினைக்கிறார்கள்!




ந்த
இடி சத்தத்துக்கு
அவளும் பயந்திருப்பாளோ?!


சுஜாதா
கவிதா பத்மா உஷா
அப்புறம் கீதா
இவை எல்லாம்
வெறும் பெயர்கள் அல்ல


ரண்டு விசயங்கள்
மட்டும்
அப்பிடியே மனதில் நிற்கிறது
முதன் முதலில் கடல் பார்த்தது
கவிதா பார்த்தது


ரு சிங்கத்தை
காதலித்திருதால் கூட இந்நேரம்
சொல்லியிருப்பேன்


விக்கல் வரும்போதெல்லாம்
அம்மா சொல்கிறாள்
யாரோ நினைக்கிறார்கள் என்று
கோபம் கோபமாக வருகிறது
யாரோவா நீ?


து என்ன
அந்தப் புறா
சொல்லிவைத்த மாதிரி
உன்வீட்டுக்கும்
என்வீட்டுக்குமாய்ப் பறக்கிறது?
நீ ஊரில் இல்லை
அது தெரியாமல்
திருவிழா கொண்டாடுகிறார்கள்


ன்னும்
என்ன வேண்டி
கோவிலுக்கு
வருகிறாய்?


நீ வடம்
பிடிப்பதற்க்கு
முன்னதாகவே
நகர ஆரம்பித்துவிடுகிறது தேர்


ல்ல
வேளை
எனக்கான தண்டனை முடிந்த பிறகு
நீ
வகுப்பறைக்குள் வந்தாய்


தேவை இல்லாமல்
குழப்பம் விளைவிக்கிறாய்
எல்லா திருமண வீடுகளிலும்!




கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!

6 ◄◄ கழுவிக் கழுவி ஊத்த ►►:

ரசிகன் said...

கவனிக்கும் படியான எழுத்து. அத்தனையும் அருமை. குறிப்பாக..

//நீ ஊரில் இல்லை
அது தெரியாமல்
திருவிழா கொண்டாடுகிறார்கள்//

வாழ்த்துக்கள்.

குறுக்காலபோவான் said...

ரசிகன்@உண்மையில் நீங்கள் ரசிகன்தான். உங்கள் ரசனைக்கு நன்றி.

பால கணேஷ் said...

விக்கல் வரும்போதெல்லாம்
அம்மா சொல்கிறாள்
யாரோ நினைக்கிறார்கள் என்று
கோபம் கோபமாக வருகிறது
யாரோவா நீ?
-அருமையான வரிகள் மிஸ்டர் குறுக்கால போவான் (என்ன பேர்சார் இது?) தொடர்ந்து நல்ல கவிதைகளை உம்மிடம் எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்..!

நம்பிக்கைபாண்டியன் said...

அனைத்தும் நன்றாக இருக்கிறது!

குறுக்காலபோவான் said...

கணேஷ் @ வாழ்த்துக்களுக்கு நன்றி.
இயன்றவரை உங்கள் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றேன்.
(தமிழ் பெயர்தான் சார்.)

குறுக்காலபோவான் said...

நம்பிக்கைபாண்டியன் @ உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

Post a Comment

♥ நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க ♥

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜில்லென்று ஒரு Website!