பால் வினையாளி


உட்கார்

பெயர் சொல்
பெண்ணே...
அப்பா அம்மா இட்டது
மகாலட்சுமி
மாமா சூட்டியது
சுகப்ரியா


தொழில்....?
உலகின் மிகப் பழமையான தொழில்


வயது....?
ஆறு வருடமாய் பதினாறு


எடை....?
எடை பார்க்கும் இயந்திரம் எடை பார்ப்பதில்லை


உயரம்....? வறுமைக்கோட்டில் தலைதட்டும் உயரம்
நிறம்....?

மாறிக் கொண்டேயிருக்கும்


உன் போன்றோர் தோன்ற ஏது காரணம்?
செல்வத்தின் எச்சமும்
வறுமையின் உச்சமும்


இதில் சகிக்க முடியாதது....?
இங்கே வந்து வீடு நினைத்து
ஆண்கள்
சிலர் அழுவதுஅதிகம் கேட்ட பொய்கள்?
மீண்டும் சந்திப்போம்இலக்கியப் பரிச்சயம்?
குறள் கூட ஒன்று சொல்வேன்.


காதாரச் சொல் கேட்போம்..

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
உச்சத்தா
ற் காண படும்.இரைப்பை நிரப்பவா கருப்பையை பட்டினியிட்டாய்?
சில உறுப்புக்கள் அநாவசியம்
குடல்வால்

இரண்டாம்
கிட்னி
ஆறாம்
விரல்
எனக்கு
கருப்பைஎதுவரைக்கும் இத்தொழில்?
திருமணம்-எய்ட்ஸ்
இரண்டிலொன்று முந்தும்வரை

....


பூமியின் மீதொரு கண்ணீர்த்துளி
முதல் விலைமகள் அழுததுளி
சாத்திரம்
மதம் சட்டம் இலக்கியம்
எல்லா
விரல்களும் துடைக்கப்போய்
ஆசிவதித்த
அதே துளி
முட்டையிட்டு
முட்டையிட்டுக்
கடலாய்
பழகிய கண்ணீர்த்துளி

மாறும்
உலகில் மாறாத ஒன்றாய்
மாதவி
மகளொருத்தி
கண்ணகியானால்
கண்ணகி மகளொருத்தி
மாதவியானால்...
மீண்டும்
ஈரம்
சேராத முத்தம்
மூலம்
சேராத தழுவல்

ஓட்ட
வைத்த புன்னகை
ஒலிப்பதிவுப்
பேச்சு அவரவர் தேவை தீர்ந்தும்
அவள்
தேவை தீராத வெறுமை

சிகரெட்
வாசனை கழிய
சற்றே
திறந்த ஜன்னல்வழி கசியும்

'பெண்ணுரிமை கோஷங்கள்'
ஜன்னல்
இழுத்தடைத்து தயாராகிறாள்
இன்னொரு
பந்திக்கு

இலை கழுவ.

...

...


கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!

7 ◄◄ கழுவிக் கழுவி ஊத்த ►►:

சிந்தையின் சிதறல்கள் said...

அருமை எடுத்துக்காட்டு
உண்மை வரிகள்

Anushani Alagarajah said...

வைரமுத்துவின் சிறந்த எழுத்துக்களில் சிறந்ததொன்று இது!

குறுக்காலபோவான் said...

anushani!
வைரமுத்துவின் சார்பில் நன்றி!

Minmalar said...

ஸ்பைடர்மேன் ரொம்ப நேரமா
பள்ளம் தோண்டிக்கிட்டே இருக்காரே?
கொஞ்சம் ஏத்தி விடக்கூடாதா!

குறுக்காலபோவான் said...

Minmalar!

ரெண்டு ப்ரண்ட்ஸ் டைட்டானிக் படம் பார்க்க போனாங்களாம்.
படம் முடிஞ்சு வெளில வந்து....

ஒருத்தன் சொன்னான்,
" காதல் ரொம்ப அழகான விசயம்தான்ல"

மற்றவன்
" கப்பல் ரொம்ப பெருசா இருந்துச்சுல்ல மச்சி "

ஒருத்தன் கப்பல பாத்தான்.
மற்றவன் காதலைப் பாத்தான்.

நீங்க எத பாத்தீங்க????

( மின் மலர் - nice name )

Anonymous said...

என்ன-னு பாராட்டனும் அதையும் சொல்லேன்.,
சரி இப்போதைக்கு. பாராட்டுக்கள், பாராட்டுக்கள், பாராட்டுக்கள், பாராட்டுக்கள்,பாராட்டுக்கள், பாராட்டுக்கள்,பாராட்டுக்கள், பாராட்டுக்கள்,பாராட்டுக்கள், பாராட்டுக்கள்,பாராட்டுக்கள், பாராட்டுக்கள்,பாராட்டுக்கள்,
பாராட்டுக்கள், போதுமா ராசா

குறுக்காலபோவான் said...

Anonymous @ எப்ப பாரு உங்களுக்கு வெளாட்டுத்தனம் :P

Post a Comment

♥ நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க ♥

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜில்லென்று ஒரு Website!