கதவுகளுக்குப் பின்னால்...



தயவு செய்து
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்!

நான் அப்போதுதான்
என் ஆடைகளை
அவிழ்க்கத் தொடங்கியிருக்கலாம்

நான் அப்போதுதான்
அழத் தொடங்கியிருக்கலாம்

நான் அப்போதுதான்
என் சிசுவுக்கு
முலையூட்டத் தொடங்கியிருக்கலாம்

நான் அப்போதுதான்
ரத்தக் கறைபடிந்த
என் கொலைக்கருவியை
பார்க்கத் தொடங்கியிருக்கலாம்

தயவு செய்து
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்

நான் விதைக்குள் தவிக்கும்
ஒரு தளிரை விடுவித்துக்கொண்டிருக்கக்கூடும்

நான் ஒரு பறவையின் மனதை அறிய
ஒரு கிளிக்கு
பேச்சுப் பழக்கிக்கொண்டிருக்கக்கூடும்

நான் சுவரில் தொங்கும் ஒரு கடிகாரத்தையே
பார்த்துக்கொண்டிருக்கக்கூடும்

நான் ஒரு கனவின் பாதி வழியில்
நின்றுகொண்டிருக்கக்கூடும்

தயவுசெய்து
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்

யாரேனும் ஒருவர்
பார்க்கக் கூடாத ஒன்றைப்
பார்த்துக்கொண்டிருக்கலாம்

யாரேனும் ஒருவர்
கேட்கக் கூடாத ஒன்றைக்
கேட்டுக்கொண்டிருக்கலாம்

யாரேனும் ஒருவர்
திறக்கக் கூடாத ஒன்றைத்
திறந்துகொண்டிருக்கலாம்

யாரேனும் ஒருவர்
இழக்கக் கூடாத ஒன்றை
இழந்துகொண்டிருக்கலாம்

தயவு செய்து
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்

இன்னும் கொஞ்ச நேரத்தில்
இந்த அற்ப சாகசங்கள் முடிவுக்கு வந்துவிடும்

இன்னும் கொஞ்ச நேரத்தில்
பாதிப் பைத்தியம் தெளிந்துவிடும்

இன்னும் கொஞ்ச நேரத்தில்
இசைத் தட்டுகள் நின்றுவிடும்

இன்னும் கொஞ்ச நேரத்தில்
ஒரு கதவை மூடிவைக்கும்
எல்லா தேவைகளும் விலகிவிடும்

தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு
உள்ளே வரவும்
கடவுள் உங்களை
மன்னிக்க மாட்டார்
ஒரு சுருக்குக் கயிற்றின்
கடைசி முடிச்சை போடுவதை
நீங்கள் தடுத்து விடும்போது

கடவுள் உங்களை
ஏற்றுக்கொள்ள மாட்டார்
ஒரு விடைபெறும் முத்தத்தின் பாதையில்
நீங்கள் குறுக்கிட்டுவிடும்போது

கடவுள் உங்களோடு
பேசுவதை நிறுத்திவிடுவார்
எல்லா உணர்ச்சிகளையும் நீங்கள்
உங்களுடைய சொற்களால் நிரப்பும்போது


கடவுள் உங்களுக்கு

கதவு திறக்க மறுத்துவிடுவார்
நீங்கள் மூடப்பட்ட ஒரு அறையின் கதவுகளை
இவ்வளவு சந்தேகத்துடன் பார்க்கும்போது

தயவு செய்து
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்!






கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!

நிகழ்ச்சித் தொகுப்பாளினியின் ஒரு மணி நேரம்!


தொலைக்காட்சி வரலாற்றில்
ஆயிரத்து ஆயிரமாவது முறையாகச் சொல்லப்படும்
அழகுக் குறிப்பை
அருமை என்கிறாள்.

நலம் விசாரிப்பவர்களிடம்
நலமாயிருப்பதாகச்
சொல்லியே
நலமிழக்கிறாள்.

ஆபாசப் பாடலைப் பாடிக்காட்டும்
பால்வாடிகளிடம்
கீப் இட் உப என்கிறாள்.

கவிதை சொல்கிறேன் என்று
உளருபவகளிடம்
ஆஹாவெனக்
கைதட்டுகிறாள்.

'அழகாயிருக்கீங்க' என்பதற்க்கும்
'டிரஸ் நல்லாயிருக்கு' என்பதற்க்கும்
அவஸ்த்தையாகச் சிரிக்கிறாள்.

பாடுவதாகச் சொல்லி
கத்துபவர்களிடம்
கட்டை விரல் உயர்த்தி
'சுப்பர்ப்'என்கிறாள்.

முன்வந்து விழும்
முடியை
முப்பத்தி இரண்டாவது முறையாகப்
பினியிழுத்து விடுகிறாள்.


வெறுபேற்றும்
அறுவை மன்னர்களிடம்..
பேசியதில் மகிழ்ச்சி என்று
சொல்லிவிட்டு...
அடுத்த நாளும்
அதே நேரம்
அதே நிகழ்ச்சியில்
சந்திப்பதாகக் கூறி
விடைபெறும்
அவளைப்பார்க்க பாவமாகத்தான் இருக்கிறது!



கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!

யானைக்கனவு


கனவில்
யானை துரத்தத்
திடுக்கிட்டு விழித்தேன் -
தூக்கம் கலைந்தது.

யானை கனவு
நல்லதென
நம்பிக்கை அளித்தாள் பாட்டி.

எதற்க்கும்
பிள்ளையாருக்கு
ஒரு அர்ச்சனை பண்ணிவிடு
என்றாள் அம்மா.

கனவுகளுக்கு எல்லாம் அர்த்தம் தேடி
அலையாதே
அரியர் பேப்பர்சை
கிளியர் சியைப் பார்
அட்வைஸ் வழங்கினார்
அப்பா.

'யானை' என்பது
காமத்தின் குறியீடு
உன் காமமே
உன்னைக் கனவில் துரத்துகிறது'
உளவியல் படித்த நபனின்
உளறல் இது.

இப்படியாகவும்
இன்னுமாகவும்
கனவு குறித்த
கணிப்புக்கும்
கவலைகளும்

ஒருநாள் எதிர் வந்தது
ஒப்பிலியப்பன் கோயில் யானை
பயந்து நடுங்கி விலகுகையில்
தும்பிக்கை துக்கி
ஆசிவதித்தது.

நல்ல வேலையை
என்னை துரத்துவதுபோல்
கனவேதும் கண்டிருக்கவில்லை
யானை!









கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!

அவ என் ஆளுடா மச்சான்!





குழந்தை 01 :- மச்சான் நேற்று இரவு முழுதும் தூக்கமே இல்லடா!!!
நான் ரொம்பவும் அப்செட்டா இருக்கன்டா!!!


குழந்தை 02 :- ஏன் மச்சான்? வீட்ல ஏதும் ப்ரோம்ப்ளமா?


குழந்தை 01 :- இல்ல மச்சான் நேற்று TOYS வாங்க கடைக்கு போயிருந்தேன். அங்க ஒரு செம பிகருடா! ஒரு மூணு வயசு இருக்கும்... அவங்க அம்மா மடியில படுத்திருந்து, வாயில விரல வச்சு என்ன பார்த்து சிரிச்சா... ஐயோ ஐயோ என்னால முடியலடா!!!


குழந்தை 02 :- அப்புறம் என்ன மச்சான் ஆச்சு??


குழந்தை 01 :- நான் பலூன் எல்லாம் வச்சு செம சீன எல்லாம் போட்டன் மச்சான், அவ கண்டுக்கவே இல்லடா மச்சான்... ரெண்டு நாளா “CERELAC” கூட ஒழுங்கா சாப்பிட முடியல மச்சி!!!! என்னா பீலிங்க்ஸ் தெரியுமா? ?அவ என் அஞ்சல மச்சி ??


குழந்தை 02 :- விடு மச்சி அவல அவ வீட்டுக்கே போய் தொட்டிலோட தூக்கிடுவோம்!!!.....


இந்த "வாண்டுகள்(வாரணம்) ஆயிரம்" பிடிச்சிருந்தா
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.




-------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜில்லென்று ஒரு Website!