வாங்க!
தலைப்பை பார்த்ததும் ஏதோ பலான விஷயம் என நம்பி வந்தீங்களா?
ஆண்டவர் உங்களுக்கு நல்ல சிந்தனைகளைக் கொடுக்கட்டும் !
இது நீங்கள் எதிர்பார்ப்பது போன்ற விடயம் அல்ல.
உலக நாயகனின் வாழ்வில் நடந்த ஒரு அழகான சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் அக்கடமியின் சார்பில்,ஆந்திர மகிள சபா,க்ளார்க் காது கேளாதோர் பள்ளி,அவ்வை இல்லம் போன்றவற்றைச் சேர்ந்து உடல் ஊனமுற்ற மாணவர்களுடன் " நேருக்கு நேர் " நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் நடிகர் கமல்ஹாசன்.
"என்னைப் பொறுத்தவரையில் நீங்க ஊனமுற்றவங்க இல்ல.இந்த நூற்றாண்டில் உங்களைன்னு யாராவது சொன்னா,அவங்க தேசத் துரோகிகள்!' என்று உணர்ச்சிவசப்பட்ட கமலிடம் மாணவர்கள் சரமாரியாக கேள்விகேட்டனர்.
"அப்புவா நடிச்சது எப்படி?"
"தொப்பிகுள்ள இருந்து புறா எப்படி வந்ததுன்னு கேட்டா,மந்திரவாதி சொல்லாமாட்டான்.அந்த மாதிரி தான் இதுவும்.ஆனா, இதுல மந்திரம் இல்ல...தந்திரம்தான்!"
"நீங்க ஊனமுற்றவரா நடிச்சிருக்கீங்களா?"
"நடிச்சிருக்கன்.அதாவது படிக்காதவனா!
"உங்கள் இளமையின் ரகசியம் என்ன?" என்று ஒரு பெண் கேட்க...
''பத்து வருஷம் கழிச்சு நீங்க இதே கேள்விய கேட்டா பத்தாயிரம் ரூபா தாரேன்!" என்றார் கமல்.
"நீங்க என்னை அப்போ ஞபகம் வச்சிருப்பீங்களா?" என அந்தப் பெண் எதிர்க் கேள்வி கேட்டார்.
கமல் புன்முறுவல் பூத்தார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்தப் பெண் கமலிடம்.
"என் பெயர் ஞபகம் இருக்கா?" என்றார்.
"ஞபகம் இல்லையே..." என ஜோசித்தார் கமல்.
பத்து நிமிஷத்திலேயே இப்பிடின்னா...பத்து வருஷம் கழிச்சு மட்டும் எப்படி ஞபகம் இருக்கும்?"
"பத்து வருஷம் கழிச்சு நீங்க வந்தா, 'பிரேமாவதி' ன்னு கரெக்டா சொல்லுவேன்!" என கமலுக்கே உரிய குறும்புடன் அவரை மடக்க,மாணவர்கள் கைதட்டலில் குஷி!