அதையும் தாண்டி புனிதமானது!




மாலை எழுமணிக்கெல்லாம் பண்ணையில் அமைந்துள்ள யாழ்-கொழும்பு பேருந்து நிலையம் வழமை போல் தனக்கேயுரிய பரபரப்புடன் இயங்க்கிக்கொண்டிருந்தது. முன் கூட்டியே பதிவு செய்யப்பட்ட பேருந்தினருகில் தன்னக்காகவே காத்திருக்கும் மிதுனை அழைத்துக்கொண்டு பஸ்ஸினுள் ஏறினான் ரஜீவன்.

ஏறியவுடனேயே 23 ,24ஆம் சீட்டுக்களில் யார் உட்காந்திருக்கிறார்கள் என்பதை கவனித்தான்.
அவர்களுடைய சீட் நம்பர் என்னவோ 21 ,22 தான். ஆனால் இளைஞர்கள், இளைஞசிகள் தமது நீண்ட பேருந்துப் பயனங்களின் போது தமது இருக்கைகளின் வசதி பற்றிக் கவலைப்படுகிறார்களோ இல்லையோ.. தமக்கருகில் இருக்கும் ஆசனங்களில் அமரப் போகிறவர்களைப் பற்றி அதிக அக்கறை காட்டுவார்கள். அந்தத் தொலைநோக்குப் பார்வையில்தான் ரஜீவன் தனக்கருகில் இருந்த இருக்கைகளை நோட்டமிட்டான். அந்த இருக்கைகளை அதுவரை காற்றுத்தான் நிரப்பிக்கொண்டிருந்தது.




ரஜீவனும் மிதுலனும் ஏறும்போதே முக்கால்வாசி சீட்டுக்கள் நிரம்பியிருந்தன. இவர்களிருவரும் தத்தம் இருக்கைகளில் செட்டிலாகி அரை மணிநேரம் கடந்தும் அவர்களுக்கருகிலிருந்த இரு ஆசனகளையும் கடைசியில் மூன்று சீட்டுகளையும் தவிர அனைத்திலும் மனிதத்தலைகள். பஸ்சும் புறப்படத் தாயராபோதுதான் எங்கிருந்தோ வந்த அந்த இரு பெண்களும் அரக்கப்பறக்க பேருந்தினுள் ஏறினர்.

" அவளா அது?!

ஆமாம்! அவள்தான் அது! "

மூன்று செக்கனுக்குள் தானே கேள்வியும் கேட்டு அவனே விடையும் சொல்லிக்கொண்டான் ரஜீவன். அவனது மூளை இ
வ்வளவு வேகமாக முன்னரேயே சிந்தித்திருந்தால் முதல் தடவையிலேயே பல்கலைக்கழகத்துக்குள் நுழைத்திருப்பான். ஏறியவர்கள் தனக்குப் பக்கத்தில் இருக்கும் வெற்றிடத்தைத்தான் நிரப்பப்போகிறார்களா?
அல்லது....
ச்சே! ச்சே!...
கடைசி சீட்டுக்களில் மனுஷன் உட்காருவானா?!
யாழில் கர்ப்பத்துடன் ஏறுவள் கொழும்பில் இறங்கும்போது குழந்தையுடன்தான் இறங்குவாள். அப்படி ஒரு குலுக்கல்.


அவனது நம்பிக்கையொன்றும் பொய்க்கவில்லை. வந்த தேவதைகள் (அந்த மூஞ்சிகளுக்கு தேவதைகள் என்பது கொஞ்சம் ஓவர்தான்) சொல்லிவைத்தாற் போல் ரஜீவனுக்கு பக்கத்திலிருந்த
ஆசனங்களில் அமர்ந்துகொண்டனர். அமர்வதற்க்கு முன்னாள்
வந்தவர்களில் ஒருத்தி ரஜீவனைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையை வீசிவிட்டே அமர்ந்தாள். அந்த இருவரில் யார் தன் அருகில் அமர வேண்டுமென எதிர்பார்த்தானோ அவளே அமர்ந்தாள். என்றுமே இல்லாதவாறு ரஜீவனுக்கு அதிஷ்டக்காற்று கொஞ்சம் பலமாகவே வீசியது.


எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததது!

எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!
என்று நம்பினான் ரஜீவன்.

அது என்ன நடக்கப் போவது?

ரஜீவன் படித்த இந்துக் கல்லூரியின் சகோதரப் பாடசாலையான இந்து மகளிர் கல்லூரியில்தான், இப்போது பேருந்தில் ரஜீவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாளே அந்த 'அனுஷா' படித்தாள். சகோதரப் பாடசாலையில் படித்தாள் அனைவரையும் சகோதர சகோதரிகளாக நினைக்கவேண்டுமா என்ன?!

ஆதலால் சகோதரப் பாடசாலையில் படித்தாலும் அனுஷாவை சயின்ஸ் ஹாலில் கண்ட அந்தக் கணத்திலேயே 17வது முறையாகக காதலில் விழுந்தான்
நம்ம கதை நாயகன் ரஜீவன். காதலில் விழுவதும் பின்பு எழும்புவதும் அவனுக்கொன்றும் புதிதல்ல. ஏற்கனவே பதினாறு முறை முயற்சி செய்து தோல்வியடைந்து ' வீழ்வது தவறல்ல! வீழ்ந்து கிடப்பதுதான் தவறு! ' என்று 'விடாமுயற்சி'க்கு யாரோ சொன்ன அற்புதமான வரிகளை இந்த மூதேவி தன் காதல் திருவிளையாடல்களுக்குப் பயன்படுத்திக்கொண்டது.




அவனது நண்பர் வட்டத்தில் முதன் முதலில் காதல் வயப்பட்ட பெருமையும் அவனையே சாரும். அப்போது அவன் எட்டாம் தரத்தில் படித்துக்கொண்டிருந்தான். மாலத்தி டீச்சரில் தொடங்கி அனுஷாவோடு சேர்த்து பதினேழு. கணக்கு கூட்டி கழித்துப் பெருக்கி வகுத்துப் பார்த்தால் கூட சரியாகவே வருகிறது. ஏற்கனவே பதினாறு காதல்கள் தந்த மோசமான தோல்வி அனுபவங்களில் காதலில் 'பொறுமை' என்பது மிக முக்கியம் என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தான். அதனாலேயே உயர்தரம் படித்த இரண்டரை வருடங்களும் அனுஷாவுடனான தன் காதலை வெளிப்படுத்தக் கிடைத்த ஆயிரம் நல்ல வாய்ப்புக்களையும் பொறுமையாக தவறவிட்டிருந்தான்.

அதன் பின்பு
பரீட்சைக்குத் தயாராவதிலேயே காலம் சென்றது. தன்னைப் போலவே அனுஷாவும் பல்கலைக்கழக நுழைவை விளிம்பில் தவறவிட்டதை கேள்விப்பட்டு மகிழ்ந்த ஒரே நல்லவனும் ரஜீவன்தான். ஏனெனில் தனக்கு முன்னரேயே அவள் பல்கலைகழகம் சென்றுவிட்டால் ந்த திராட்சைப் பழத்தை வேறு எந்த நரியாவது தட்டிப் பறித்துக் கொண்டுவிடுமே என்ற அச்சம்தான். சொல்லிவைத்தாற் போல் இரண்டாவது தடவையில் இருவரும் ஒரே பல்கலைகழகத்துக்கு தேர்வாகியிருந்தனர். ஆனால் விதி வெட்டுப்புள்ளி வடிவில் மீண்டும் விளையாடியது. அவள் தேர்வு செய்த துறைக்குள் இவனால் நுழையமுடியவில்லை.

வேறு துறையென்றாலும் அனுஷாவின் ஒவ்வொரு அசைவையும் யாரோ ஒ௦ருவர் மூலம் அறிந்து கவனித்தபடி இருந்தான். அவள் வெள்ளவத்தையில் தோழிகளோடு தங்கியிருந்த வீடு, அவள் எந்தக் கடையில் வழமையாகச் சாப்பிடுகிறாள் என்று அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தான். தற்செயலாக எங்காவது காணும்போது அவள் மெல்லிய புன்னகையோடு இவனைக் கடந்து செல்வாள். அதற்க்கான அர்த்தம் 'நீயும் நானும் யாழில் அருகருகில் இருந்த கல்லூரிகளில் படித்தவர்கள். சயின்ஸ் ஹாலுக்கு வரும்போது உன்னை அடிக்கடி கண்டிருக்கிறேன் ' அவ்வளவுதான். அது அவனுக்கும் தெரியும் . ஆனாலும் அதற்க்கு வேறு வேறு
வேறு அர்த்தங்கள் கண்டுபிடித்து புளுக்கப்பட்டுக் கொண்டான்.

இத்தனை நாட்களில்,
பல மணி நேரத்தையும் பல மைல் தூரத்தையும் பக்கத்திலிருந்தபடியே கடக்கும் இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கவில்லை இன்று எப்படியாவது நான்கு வருடங்களாக சேமித்து வைத்திருந்த காதலை சொல்லிவிடுவதென்று முடிவெடுத்துவிட்டான். முடிவெடுத்த அந்தக் நிமிசத்திலிருந்து நிமிடத்திற்க்கு 72 தடவை மட்டும் துடிக்கவேண்டிய இதயம், 96 தடவை துடிக்கத் தொடங்கியது. பஸ் இன்ஜினை விட தன் உடலிலிருந்து அதிக உஷ்ணம் வெளியேறுவதாய் உணர்ந்தான்.

அரை
மீற்றர் இடைவெளியில் காதலி!

இன்னமும் முடிவு தெரியாக் காதல்!

காதலை எப்படியாவது சொல்லிவிடுவதேன்ற தீர்க்கமான முடிவு!
இப்படியான சூழ்நிலையில் யாருக்காயினும் இதயத் துடிப்பு வேகமாவது இயல்புதானே.

இப்போது பிரச்சினை காதலை எப்படிச் சொல்வது?

ஒரு வெள்ளைக் காகிதத்தில் தனது வெள்ளை மனதின் ஓரத்தில் படிந்துள்ள காதல் பற்றிய கலர் கலர் கனவுகளை எழுதி
அவளது கைகளுக்குள் திணிப்பததா?

அல்லது

ஏற்கனவே யாரோ ஒருவரின் உதவியுடன் பெற்று இன்னமும் பயன்படுத்தாமல் வைத்திருந்த அனுஷாவின் கையடக்கத் தொலைபேசி எண்ணுக்கு காதல் குறுஞ்செய்தி அனுப்புவதா?

அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது.

தன்னோடு இன்னொரு ஜீவனும் வந்ததே! அதனிடம் ஏதாவது
டியா கேட்கலாமே என்று மிதுலன் பக்கம் பார்வையைத் திருப்பினான்.
ஊர்ந்து கொண்டிருந்த பேருந்தில் ஓடிக்கொண்டிருந்த அந்த மொக்கைப் படத்தை ஆறாவது முறையாகவும் ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்து அது. ரஜீவனுக்கு இருந்த காதல் பட படப்பில் அது என்ன திரைப்படம் என்று நிமிர்ந்து பார்க்கும் துளி ஆர்வம் கூட இல்லை. ஆனால் திரைப்படத்தில் யாரோ ஒருவர் முக்கி முக்கி பேசும் வசனம் மட்டும் செவிகளில் விழுந்த வண்ணமிருந்தது.

"என் வாழ்க்கைல ஒவ்வொரு நிமிசமும் ஒவ்வொரு செக்கனும் நானா செதுக்கினதுடா "

ரஜீவன் எதிலும் ஆர்வமற்றவனாக காதலில் சொதப்புவது எப்படி? என்று தீவிரமாக ஜோசித்துக்கொண்டிருந்தான்.

யோசனைகளுக்கிடையில் திருமுறிகண்டியும் வந்து சேர்ந்தது. பெரும்பாலானோர் இறங்க அந்த பெரும்பாலானோரில் அனுஷாவும் இருக்கக் கண்டு ரஜீவனும் இறங்கினான்.

(மிதுலனும் அனுஷாவின் பெயர் தெரியாத் தோழியும் இறங்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம்.அவர்கள் இறங்குவது இக்கதையின் போக்குக்கு நல்லதல்ல. ஆகவே அவர்கள் இறங்கவில்லை)

அனுஷா கால்களையும் முகத்தையும் கழுவிக் கொண்டிருக்கும்போது ரஜீவன் தன்
சொல்லாத காதலைச் சொல்ல நெருங்கினான். கழுவி முடித்த அவள் இவ்வளவு காலமும் தந்திராத ஒரு அழகிய புன்னகையோடு கையிலிருந்த கிண்ணத்தை நீட்டினாள்.

'
ஆமா! உன்னிடம் இதை வாங்கத்தான் இப்போது வந்தேன்'

என்று மனதுக்குள்
நொந்துகொண்டே கால்களைக் கழுவினான். அவள் முகத்தில் துடைக்கப்பபடாதிருந்த நீர்த்துளிகளைப் பார்க்கும்போது பூக்கள் மேல் விழுந்த காலைப் பனித்துளிகள்தான் நினைவுக்கு வந்தது. அந்த நள்ளிரவு ஒருமணிக்கு, நடு ரோட்டில் நிற்க்கும்போது கூட அவனுக்கு கவிதை வருமாப் போல் இருந்தது.




அனுஷா பய பக்தியோடு பிள்ளையாரை தரிசித்துக்கொண்டிருந்தபோது என்றுமே இல்லாதவாறு ரஜீவனும் கண்களை மூடி வாய்க்குள் எதோ முனு முணுத்தான்.

அட! எதோ வேண்டிகொள்கிறான் போலும்....

என்ன வேண்டுதல்?

' உன் தம்பியினுடைய
லவ்க்கு ஹெல்ப் பண்ணியது போல் என் காதலையும் எப்படியாவது சேர்த்துவை பிள்ளையாரப்பா!

அப்படி என் வேண்டுத
லை நீ நிறைவேற்றினால் எனக்கும் அவளுக்கும் பிறக்கும் குழந்தைக்கு உன் சந்நிதானத்திலேயே வைத்து மொட்டைடிக்கிறேன் ' என்று கூட வேண்டியிருக்கலாம்.

கண்
ணைத் திறந்தால் பிள்ளையார் இருந்தார்.

அனுஷாவைக் காணோம்!

எல்லாப் பக்கமும் பார்வையை
ப் படரவிட்டான். அதிலிருந்த ஒரு கடைக்குள் அவள் நுழைவது தெரிந்தது.இவனும் அதே கடைக்கு போனான்.
அவள் வாங்கிய அதே நெஸ்கபேயை வாங்கினான். அவளைப் பார்த்ததும் வழமையாகச் செய்கிற பரஸ்ப்பர புன்சிரிப்புப் பரிமாற்றத்துடன் கடைக்கு வெளியே வந்த, நின்ற நிலையில் வாங்கிய நெஸ்கபேயை சுவைத்தபடி மீண்டும் எப்படி தன் காதலை வெளிப்படுத்துவது என்ற சிந்தனையில் ஆழ்ந்து.....ரஜீவன்!

திடுக்கிடுத்திரும்பினான்.

அங்கே அனுஷா
நின்றுகொண்டிருந்தாள்.
முதன் முதலாக அவனது பெயர் அவனுக்கே அழகாய்த் தெரிந்தது.

மீண்டும் அவளே தொடர்ந்தாள்.

' studies எப்பிடி போகுது?'

ஏதோ கேட்டாள்.

இவனும் சிரித்து குலைந்து அவளை விட அதிகமாய் வெட்க்கப்பட்டு சம்
ந்தமேயில்லாமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

அவள் கையிலிருந்த 'நெஸ்கபே'
ஐந்து நிமிடம் பேசுவதற்க்கே போதுமாயிருந்தது.

அவள் தனக்கேயுரிய புன்சிரிப்புடன் விடைபெற்று பஸ்ஸை நோக்கிப் போய்க்கொண்டிருந்தாள்.
அப்போது ரஜீவனுக்குள் யாரோ பேசத் தொடங்கினார்கள்.

' இதைவிட உனக்கு வேறு நல்ல சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்கப் போவதில்லை.இதற்க்கு முன்னர் ஒரு வார்த்தைகூட பேசியிராத ஒருத்தி உரிமையாக உன் பெயர் சொல்லி
வலிய வந்து பேசுகிறாள் என்றால் என்ன அர்த்தம்? நீ காதலைச் சொல்லி அவள் மறுத்தால் உலகம் என்ன அழிந்துவிடப் போகிறதா?

எதற்காக நீ கலங்குகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்க்கு

இன்றைய உன்னுடையது நாளை வேறோருவனாகிறது! '

என்று மீண்டும் கிருஷ்ணன் சொன்ன பகவத்
கீதையைச் சொல்லி யாரோ ஒருவன் உள்ளுக்குள் இருந்து உசுப்பிவிட்டுக்கொண்டிருந்தான்.

அவள் பஸ்சில் ஏறுவற்க்குள் தன்
காதலைக் கொட்டிவிடத் துணிந்தான்.


நடந்தான்.

வேகமாக நடந்தான்.

மிக வேகமாக நடந்தான்.

அனுஷா!

அவளுக்கு கேட்கவில்லை.

அனுஷா!

திரும்பி
ப் பார்த்தாள்.

அவள் திரும்பியதுதான் தாமதம்

' ஒரு நிமிஷம்! சொல்றேன்னு தப்ப நினைக்கதையும் எப்ப முதன் முதல்ல உம்மள ...' அவனிடமிருந்து வார்த்தைகள் ஒரு ஒழுக்கின்றி தாறுமாறாக வந்து விழுந்து
கொண்டிருந்தது. எப்படியோ சொல்லவந்ததை ஒருவாறாக சொல்லி முடித்திருந்தான். அவளின் முகம் இறுக்கிப் போயிருந்தது. பதிலேதும் இல்லை. இறங்கிய எல்லோரும் பஸ்சில் ஏறிக்கொண்டிருந்தனர் அனுஷாவும் பஸ்சில் ஏறுவது தெரிந்தது.

சில வினாடிகளுக்கு முன் 'கட்டாயம் சொல்லியே தீரவேண்டும்' என்று கட்டளை போட்ட மனசு இப்போது '
ஏன் அவசரப்பட்டு சொன்னாய்?' என்று கேள்வியும் கேட்டது. இதயத்துடிப்பு வேகம் குறைந்து வழமை போல் துடிக்கத் தொடங்கியது. உடலிலும் உள்ளத்திலும் ஒருவித சோர்வு படரத் தொடங்கியது. உசுப்பி விட்ட அந்தக் குரலும் இப்போது கேட்கவில்லை. கடைசியாளாக பஸ்சில் ஏறினான். படிகளில் ஏறும்போதே தனது 'காதல் தோல்விச் சாதனைப் பட்டியலில்' 17வாதாக அனுஷாவையும் சேர்த்துக்கொண்டே ஏறினான்.

அவளை இனி
த் தற்செயலாகக் கூடப் பார்த்துவிடக்கூடாது என்று முடிவெடுத்த ரஜீவன். அவள் சீட்டுப்பக்கம் பார்வையைத் திருப்பாமல் தன் இருக்கையில் அமர்ந்துகொண்டான்.


இனி எப்படி அவள் முகத்தில் முழிப்பேன்?
சொல்லாவிட்டாற் கூட என்றாவது சொல்லி ஓகே பண்ணிடலாம் என்ற நம்பிக்கையில் காலம் கழித்திருக்கலாமே!

அல்லது
அன்புக்குரிய தோழிகள் பட்டியலில் அவளையும் சேர்த்திருக்கலாமே!

இப்போது சொல்லி என்ன பயன் காதல் தோல்விப்
பட்டியலில் கூட ஒரு பெயர் சேர்ந்து, பட்டியலின் நீளம் கூடியதுதான் மிச்சம். ரஜீவனின் மனசு A9 பாதியில் இருந்த அத்தனை குண்டு குழிகளிலும் விழுந்து விழுந்து எழும்பியது.

அனுஷா நிச்சயமாக தன் தோழியிடமோ,வேறு யாரிடமோ சொல்லப் போவதில்லை. சற்று முன் முடிந்து போன அந்தக் காதல் கதை பற்றி தன்னையும் அவளையும் முறிகண்டிப் பிள்ளையாரையும் தவிர வேறு யாருக்கும் தெரிவற்க்கு வாய்ப்பில்லை.

ஆனாலும் 17வது காதலேன்றாலும் கூட அது தந்த வலி அதிகமாவே இருந்தது.
பாதையில் கொஞ்சம் பெரிய குழி போல திடிரென்று பஸ் கொஞ்சம் அதிகமாகவே குலுங்கி எழும்ப தற்செயலாகக் கூட பார்க்ககூடாது என்று என்று நினைத்த அனுஷாவின் முகத்தை தற்செயலாய் பார்த்தான்.

நான்கு விழிகளும் இரு பார்வைகளும் ஒரு புள்ளியில் சந்தித்துக்கொண்டன.
சுவற்றில் அடித்த பந்தாய் சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டான். ஆனால் ஏதோ அவள் சிரித்ததைப்போன்று உணர்ந்தான். காதல் மயக்கம் இன்னமும் தெளியவில்லை என்று நினைத்தவன் மனம் கேட்காமல் அவள் பக்கம் நைசாகத் தன் பார்வையைக் கசியவிட்டான். அவள் உதடுகள் வழமை போல் அவனைப் பார்த்து புன்னகைத்தன. அனால் அந்தப் புன்னகையில் வழமையை விடவும் வேறு ஏதோ கலந்திருந்தது. குறும்பு,செல்லக் கோபம், வெட்கம்,காதல் இன்னும் ஏதேதோ...

அவள் கண்கள் உதடுகளை விடவும் அதிக
மாச் சிரித்தன.

தன்னை சுதாகரித்துக்கொண்டு நெற்றியைச் சுருக்கி புருவத்தை உயர்த்தி ' ம்ம்ம்...? ' என்று சத்தமே வராது சம்மதம் கேட்டான். அவளும் இன்னும் அகலமாய் சிரித்து காற்றுக்கு நோகாமல் மேலும் கீழுமாய்த் தலையசைத்து
கண்களை மெதுவாக மூடித் திறந்து சம்மதம் சொன்னாள்.

அவ்வளவுதான்!



' ஓ! ' என்று கத்தவேண்டும் போல்

அல்லது

ஸ்ஸின் அந்த முனையிலிருந்து மற்ற முனைவரை ஓட வேண்டும் போல்

அல்லது

ஓடுகிற பஸ்சிலிருந்து குதிக்கவேண்டும் போல்

அல்லது

கண்டக்டரையும் டிரைவரையும் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கவேண்டும் போல்

ஏதாவது ஒன்றை செய்யவேண்டும் போல் இருந்தது ரஜீவனுக்கு.

வவுனியாவை தாண்டியவுடனேயே பஸ்சில் பாடல்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் ரஜீவனுக்கு மட்டும்
'பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே.. பார்த்ததாரும் இல்லையே..' என்று அந்தப் பாடலைப் பாடலைப் பாடிய, ஹரிணி, ரூப் குமார் ரதோட் , அன்றியா, G. V. பிரகாஷ் குமார் நால்வரும் அவனது காதலுக்காக உருகி உருகிப் பாடுவது அவன் காதில் மட்டும் கேட்டபடியேயிருந்தது. அவளது காதிலும் கேட்டிருக்கவேண்டும் போல், எமி ஜாக்சன் கொடுத்த அதே ரியாக்சன் அவள் முகத்திலும்.


இந்த சந்தோசத்தை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டான்.

ஏனெனில்
துக்கத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும்போது அது அரைவாசியாக குறைந்து விடுகிறது. சந்தோசத்தை பகிர்ந்துகொள்ளும்போது அது இர
ட்டிப்பாகிறது'அவனுக்கு அந்த சந்தோசம் அப்போது இரட்டிப்பாகத் தேவைப்பட்டது.அதற்கு ஒரே வழி?
மிதுலன்



'மச்சான்!' என்று கொண்டே மிதுலனிடம் திரும்பினான்.

அந்த மச்சான்
தூங்கி அரை மணி நேரமாகியிருந்தது.

'நாளைக் காலை கொழும்பில் இறங்கியதும், தனக்குத் தெரியாமல் வெற்றிகரமாக நடந்து முடிந்த
ஒரு காதல் பற்றி, அறைக்கு சென்று சேர்வதற்க்கிடையில் ரஜீவன் சொல்வான் என்றோ...

அதை, தான் இரண்டு நாட்கள் கழித்து
ப்ளாக்கில் கதையாக எழுதி, அவன் மானத்தை கப்பல் ஏற்றுவேன் என்றோ...

எதுவுமே தெரியாமல் 'அனிருத் அன்ட்ரியாவுக்கு கொடுத்த முத்தம்' பற்றி ஆய்வுக்கனவு கண்டு கொண்டே தூங்கிகொண்டிருந்தது அந்த அப்பாவி ஜீவன்.


கதை முடிந்துவிட்டது.



இருந்தாலும் ஒரு நிமிஷம்!

இந்த வரி வரை பொறுமையாக
வாசித்த உங்களுக்கு மிக்க நன்றி!




நீங்கள் இப்போது காலிமுகத்திடல் பக்கமோ அல்லது கங்காராம பக்கமோ போனால் அந்தப் புதிய இளம் காதல் ஜோடி குடையின் கீழ்18 வது திருத்தச் சட்டப் பிரிவுகள் பற்றியோ அல்லது உலக வெப்பமயமாதலின் விளைவுகள் பற்றியோ தீவிரமாக விவாதித்துக்கொண்டிருப்பதைக் காணலாம்.

அப்படி அவர்களைக் கண்டால் தயவு செய்து என் அறை
த் திறைப்பை கொண்டுவந்து தந்துவிட்டு போய்க் காதல் செய்யுமாறு நான் சொன்னதாகவும்அறைக்குள் போக வழியில்லாததால் கொலைவெறியுடன் ஒரு நெட்கபேயிலிருந்து மாங்கு மாங்குன்னு அவர்களது காதல் சரித்திரத்தை கறுப்புச் சரித்திரமாக இணையத்தில் பதிவு செய்துகொண்டிருக்கிறேன் என்றும் சொல்லிவிடவும்!




முற்றும்








கருத்து சொல்லிட்டு போங்க! சாமியோவ்!

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜில்லென்று ஒரு Website!